ஆர்ட்டிமிஸ்
93
தீர்மானித்தான் அபாலோ. ஒருநாள் அபாலோ, ஆர்ட்டிமிசிடம், வில்வித்தையின் சிறப்புக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, குறிதவறாமல் அம்பு எய்த முடியுமா உனக்கு. அதோபார், கடலில், கருப்பாக ஏதோ மிதந்து கொண்டிருக்கிறது, அதைக் குறி வைத்து அம்பு எய்திடு பார்க்கலாம், என்றான்—தன் திறமையை அபாலோ குறைவாக மதிப்பிடுவது கண்ட ஆர்ட்டிமிஸ் கோபம்கொண்டு, “இது ஒரு பிரமாதமா!” என்று கூறி, அம்பை எய்தாள்—கருப்பாகத் தெரிந்த, குறி பார்த்து, அபாலோ நகைத்தான்—தன் தந்திரம் பலித்தது என்று—ஏனெனில் கருப்பாகத் தெரிந்தது, ஓரியான்! கடலில் நீராடிக் கொண்டிருந்தான்! காதலித்தவளின் அம்பு அவனைக் கொன்றுவிட்டது, ஆர்ட்டிமிஸ் புலம்பினாள்—பலன் இல்லை! மாண்ட காதலனை, நட்சத்திரமாக்கினாள்.
வேறோர் சமயம், ஆர்ட்டிமிஸ், வனதேவதை சிலருடன் நீராடிக்கொண்டிருந்ததை, மறைந்திருந்து பார்த்தான், ஆக்ட்டியான் என்ற இளைஞன். வேட்டை நாய்களுடன் அவன் அந்தக் காட்டுக்கு, மான் வேட்டைக்காக வந்திருந்தான். நீர் அருந்தச் சென்றான்—சிரிப்பொலி கேட்கவே, புதரருகே மறைந்திருந்தான், தேவலோகப் பூவையர் நீராடக் கண்டான். ஆர்ட்டிமிஸ் கடுங்கோபம் கொண்டு, ஆக்ட்டியானை மானாகும்படிச் சபித்துவிட்டாள், மானுருக்கொண்டான் ஆக்ட்டியான், மனித உள்ளம் மட்டும் இருந்தது! அதேபோது, மான் வேட்டைக்காக அவன் அழைத்து வந்திருந்த வேட்டை நாய்கள் ஓடி வந்தன. திகைத்தான் ஆக்ட்டியான்—மனித உள்ளம், உருவம்!! வேட்டை நாய்கள், மானைக்கண்டால் சும்மா விடுமா—துரத்தின—ஓடுகிறான் ஆக்ட்டியான் மானுருவில்! அவன் வந்ததோ மான் வேட்டைக்கு—இப்-