உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மாஜி கடவுள்கள்


போது அவனே வேட்டையாடப்படுகிறான்! அவனுடைய சொந்த நாய்களால்— வேட்டை நாய்கள் மானின்மீது பாய்ந்து, கடித்து, பிய்த்துப் பிய்த்துப் போட்டுவிட்டன.

இவ்விதமெல்லாம் ஆர்ட்டிமிசைப் பற்றிக் கதைகள்.

அபாலோ தேவனுக்கு இருந்தது போலவே, ஆர்ட்டிமிசுக்கும், கிரேக்க நாட்டிலே அமோகமான செல்வாக்கு பெரிய பெரிய கோயில்கள்—கோலாகலமான பூஜைகள்—நிலவொளி வழங்கும் கன்னித் தெய்வமாம், ஆர்ட்டிமிசுக்கு. எல்லாம், கட்டுக் கதைகளை மக்கள் நம்பிக் கொண்டிருந்த வரையில்! பிறகு? மாஜிதான், ஆர்ட்டிமிசும்!!