96
மாஜி கடவுள்கள்
செல்வோரையும் தடுத்து அவர்களை நன்னெறியிலே புகவைப்பதாக அமைதல் வேண்டும் என்று அறவோர் கூறுகின்றனர். மனிதனையே படைத்த கடவுளின் கதைகள், மனித குலத்தாரே அருவருக்கத்தக்க தீயவைகள் நிரம்பியதாக இருந்திடின், அவைகளைப் ‘பாராயணம்’ செய்யும் பாமரரின வாழ்க்கைமுறை எங்ஙனம் செம்மையுடையதாக முடியும். இதுபற்றிப் புராணீகன் கருதியதாகவே தெரியவில்லை. அவனுக்கு இருந்த கவலை எல்லாம், தன் இஷ்டதேவதை மற்ற தேவதைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்ததாகக் காட்ட வேண்டும் என்பதுதான். கடவுள் என்ற உயரிய கொள்கைக்கே, இப்படிப்பட்ட கதைகள் மூலம் ஊறுதேடுகிறோமே என்பதுபற்றி அவன் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. காமக் கூத்துக்களை நடத்திய கதைகளைக் கூறும்போது, கடவுட் தன்மையையே பாழாக்குகிறோமே என்று கவலைப்படவில்லை. சூரியதேவனானாலும் சரி, சந்திர தேவனானாலும் சரி, முழுமுதற் கடவுள் என்றாலும் சரி, குட்டிக் கடவுளானாலும் சரி, அவரவர்கள், தத்தமது சக்தியானுசாரம், அழகிகளுடன் சல்லாபம் செய்வர், எதிர்த்தோரை அழிப்பர்,—இந்த இலக்கணம் எல்லாக் கதைகளிலும் அடிப்படையாக இருந்திடக் காணலாம். காட்டுமிராண்டிகள் கூட்டத்திலேகூட, இயற்கையாகத் தோன்றி பிறகு, நடைமுறையாகிவிடும் கட்டு திட்டங்கள் சில உண்டல்லவா, அந்த வகையான கட்டுதிட்டம்கூட, கடவுளர் உலகிலே இல்லை என்று எண்ணிடத் தோன்றும் விதமாகவே எல்லாக் கடவுட் கதைகளும் தீட்டப்பட்டுள்ளன. ஆனால் அதேபோது, மாந்தருலகுக்கு உபதேசங்கள் தரத் தவறவில்லை. கெட்டவர் தண்டிக்கப்படுவர், நல்லவர் ரட்சிக்கப்படுவர் என்று கூறினர். பாபிக்கு நரகம், புண்யவானுக்கு மோட்சம் என்று கூறி-