உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்ட்டிமிஸ்

97


னர். கிரேக்கரின் புராணங்களிலும் ரோம் நாட்டவரின் புராணங்களிலும், எலூஷியன் பூந்தோட்டம், என்று மோட்சத்தையும் டார்ட்டாரஸ் என்று நரகத்தையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாபிகள், இந்த டார்ட்டாரசில் எப்படி எல்லாம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்பதை இந்தப் புராணங்கள் விளக்கியுள்ளன. சூதாடி, குடியன், காமக்கூத்தாடினவன், ஆகியவர்களை, டார்ட்டாரசில் வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறிவிட்டு, இதே கெட்ட காரியங்களைச் செய்த கடவுள்களையும் தொழும்படிக் கூறினர்—இரண்டும் எப்படிப் பொருந்தும் என்பதுபற்றித் துளியும் சிந்திக்கவில்லை—சிந்திக்கத் துணிபவனைச் சித்திரவதை செய்தனர். இந்த முரண்பாட்டை உணர்ந்து மக்கள், தெளிவுபெற நெடுங்காலம் பிடித்தது. இந்தத் தெளிவு பிறப்பதற்கு முன்பு, மக்கள், புராணக் கதைகளிலே எவ்வளவுக்கெவ்வளவு விசித்திரங்கள் நெளிகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு அளித்தனர். எந்தப் புராணத்திலே, நம்பமுடியாத நிகழ்ச்சிகள் அதிகமோ அவைகளுக்கே மதிப்பு அதிகம் தந்தனர். நான்முகனுடைய முகத்திலும், தோள், தொடை, காலிலும், மனிதர்கள் பிறந்தனர், என்ற ஜாதி விளக்கக் கதையை, நம்பிய நாடுதானே இது. இந்தக் கதை ‘நையாண்டி’ செய்யப்படும் நிலைக்கு நாம் வளர, எவ்வளவு காலம் பிடித்தது. இன்றும், ‘நையாண்டி’ செய்வதை ‘நாத்தீகம்’ என்று கூறிக் கண்டிப்பவர்கள் ஏராளமாக இருந்திடத்தானே காண்கிறோம். முகம் என்பது அறிவையும், தோள் என்பது வீரத்தையும், துடை என்பது உழைப்பையும், கால் என்பது சேவா உணர்ச்சியையும் காட்டுகிறது. இதைத்தான் கதை வடிவிலே கூறினர், என்று வாதாடும் மேதைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.


7