உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மாஜி கடவுள்கள்


விந்தையான இந்தக் கதைகள், நமது நாட்டுக்கு மட்டுமே சொந்தமாக உள்ள கற்பனைத் திறமை என்று களிப்புடன் கூறிக்கொள்ளும் கருத்துக் குருடர்களும் உளரல்லவா. அவர்கள் பிடித்தால் ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய விதமான விந்தைகள் நிரம்பிய கதைகளைக் கட்டினர், தாம் தொழுதுவந்த கடவுள்களைப்பற்றி, கிரேக்க, ரோம் நாடுகளிலே, முன்னாளில் இருந்துவந்த புராணீகர்கள்.

முழுமுதற் கடவுள் ஜூவஸ் தேவனுக்கு ஒருநாள் தாங்க முடியாத மண்டைக் குடைச்சலாம்!! ஆரம்பமே, எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவரோ அண்டபிண்ட சராசரங்களைப் படைத்த ஐயன்—சகல சக்தியும் படைத்த தேவதேவன், ஆனால் புராணீகன் கூறுகிறான், அவருக்கு மண்டைக் குடைச்சல் நோய் என்று. கடவுளுக்கும் இதே கதிதானா—நமக்கும்தான் வருகிறது மண்டைக் குடைச்சல், மகேசனுக்கும்தான் வருகிறது, ஆகவே நம்மையும் கடவுளையும்விட மண்டைக் குடைச்சல் நோய்தான், மகாசக்தி வாய்ந்தது போலிருக்கிறதே என்று கூறத்தோன்றும், கதையை அலசும்போது. பிணி, மூப்பு, என்பவைகளைக்கூடக் கடக்க முடியாதவராகவா, கடவுளைச் சித்தரிப்பது—சாதாரண காவிகட்டிகளுக்குக்கூறும் ‘மகிமை’ அளவுக்குக் கூடவா, கடவுள் சம்பந்தமாகக் கூறலாகாது என்றும் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க அனுமதி கிடையாது—ஆத்தீகம் சீறிப் பாயும். கடவுளுக்குத் தலைவலி வந்தது என்பதுபோன்ற கதைகளல்ல. நம்மிடம் உள்ள புராண இதிகாசங்கள், இங்குள்ளவை இகபரசுகம் தரும் மார்க்க போதனைகளும், நன்னெறி கூறிடும் அறஉரைகள் கொண்ட அற்புத ஏடுகள் என்று வாதிடுவர் சிலர். பிறநாட்டாரின் கதைகள், பித்துப்பிள்ளை விளையாட்டு போன்றவை—எனவே