உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்ட்டிமிஸ்

99


தான், கடவுளுக்குத் தலைவலி வந்தது என்றுகூடக் கதைகள் உள்ளன, என்று கூறிக் கைகொட்டிச் சிரிப்பர் சில பேர். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கட்டினது மட்டுமல்ல, அவைகளை யொட்டி வளர்ந்த திருவிழாக்களையும் பூஜைகளையும்கூட நம்மவர்கள், இன்றளவு வரையில் விடவில்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி உண்டாகிறது என்றும் அதற்காக அவருக்கு பத்து அரைத்துப் பூசுவது என்றும் இப்போதும், பூஜை, ஒன்று நடைபெறுகிறது. இதை அனுமதிப்பதும் ஆதரிப்பதும் ஆத்தீகம் என்னும், இது அர்த்தமற்ற வீண் விளையாட்டு என்று கூறுவது நாத்தீகம் என்றும், பேசுகிறார்கள். ஜூவசுக்கு ஏற்பட்ட ‘தலைவலி’ கதைக்காக இன்று, கிரீசிலோ ரோம் நாட்டிலோ, ‘மருந்திடு’ விழா நடத்த மன்னார்சாமிகளும் துணிவதில்லை—ஜுவசே இல்லை. இங்கோ, ரங்கநாதருக்குத் தலைவலி வருவதும் மருந்திடுவதும் பக்திமான்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு, மருந்திட, தேவர் பலர் முனைந்தனர்—யாராலும் முடியவில்லை, வலியைப் போக்க. கடவுளர் உலகே கலங்குகிறது. தேவதேவன் துடிதுடிக்கிறார், மண்டைக் குடைச்சலால், மற்றத் தேவர்கள், கைகளைப் பிசைந்து கொள்கின்றனர், என்ன செய்வது என்று தெரியாமல். கடைசியில், ஜுவசே, தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து, “கோடரிகொண்டு என் மண்டையைப் பிள!” என்று உத்திரவிட்டார். தந்தை சொல் மீறாத அந்தத் தனயனும் அதுபோலவே செய்தான். மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து, வடிவழகுடன் வெளிவந்தாள் அதீனே என்ற கடவுள்—குழந்தை வடிவிலே அல்ல, பருவமங்கையாக, சகல அலங்காரத்துடன். மங்கை வெளிவந்தான-