உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கிரேக்கரும் ரோம் நாட்டவரும், குடி வகைகளை எப்படித் தயாரிப்பது என்ற “ஞானத்தை”த் தந்து, மக்களை ரட்சித்தவர் என்று, பேகஸ் என்ற கடவுளைப் பூஜித்து வந்தனர். சாமான்யமான முறையிலே அல்ல, கோலாகலமாக: விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரல்ல, திரள் திரளாக. குடி தந்த கடவுளுக்கு, பக்தர்கள் நடத்திய திருவிழா, மற்றத் திருவிழாக்களைவிட ரம்மியமானதாகவே இருந்ததாம்!

மதுதேவன் பேகஸ்

சிறுத்தைகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலே ஒரு சிங்காரத்தேவன்! அவனைச் சூழ்ந்து பக்தர் கூட்டம்! அவர்களுக்கெல்லாம் அந்தத் தேவன் தந்த அருளால், வெறி ஏறும் அளவுக்குப் பானம்! அதைப் பருகிவிட்டு, ‘அவன் அருளை’ப் புகழ்ந்து பாடுவராம், ஆவராம், ஆடவரும் பெண்டிரும். காட்சியை மனக் கண்கொண்டு காணுங்கள்!

கிரேக்கரும் ரோம் நாட்டவரும், குடிவகைகளை எப்படித் தயாரிப்பது என்ற “ஞானத்தை”த் தந்து மக்களை ரட்சித்தவர் என்று, பேகஸ் என்ற கடவுளைப் பூஜித்து வந்தனர்; சாமான்யமான முறையிலே அல்ல, கோலாகலமாக; விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரல்ல, திரள்திரளாக.