உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுதேவன் பேகஸ்

103


குடிதந்த கடவுளுக்கு, பக்தர்கள் நடத்திய திருவிழா, மற்றத் திருவிழாக்களைவிட ரம்மியமானதாகவே இருந்ததாம்! பக்தியும் மதுவும் ஒருசேர உள்ளே சென்றுவிட்டால், திருவிழா கொண்டாடுபவரின் பாட்டும் கூத்தும் சாதாரணமாகவா இருந்திருக்கும்.

குடி—மனிதகுல மாண்பைக் கெடுக்கும் பொருளாயிற்றே, இதையா கடவுள் தருவார்—மதுதந்த கடவுள், கடவுள்தானா—என்ன மதியீனம் என்று கேட்கத் தோன்றும், இன்று, இங்குள்ளவர்களுக்கு.

பேகஸ், மக்களின் பூஜைக்குரிய தெய்வங்களிலே ஒருவனாகத்தான் மதிக்கப்பட்டு வந்தான்—பன்னெடுங்காலம் கிரீசிலும், ரோமிலும்—இப்போதல்ல, இளித்தவாயர்களாக அம் மக்கள் இருந்த நாட்களில். இப்போது பேகஸ், ஒரு மாஜி!!

இந்தக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்கும் நம்மவர்கள், நமது நாட்டில், நமது நாட்களில், காட்டேரி, மதுரைவீரன், முதலிய தெய்வங்களுக்கு ‘மது’ வைத்துப் பூஜை நடத்துவது ‘பக்தி’யின் இலட்சணம் என்று எண்ணும் ஆத்தீகர்கள் இருப்பதை மறந்துவிடுகின்றனர்!

அறிவு பரவாத நாட்களில் அந்த நாடுகள் நடத்திவந்த ‘ஆபாச ஆட்டங்களை’ உலகம் இவ்வளவு முன்னேறிய நிலையிலேயும், நமது நாட்டினர், பக்தியின் பேரால் செய்கின்றனரே என்பதை ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே, வெட்கப்படுவர், வேதனைப்படுவர்—எவ்வளவு ஆபாசமான, அறிவுக்குப் பொருந்தாத பூஜையாக இருப்பினும், தமது கூரிய மதியினைக் கொண்டு ஏதேனும் ஒரு தத்துவார்த்தம் கூறி, பாமரரைப் பழமையின் பிடியிலேயே இருந்திடச் செய்யும் ‘கற்றோர்’ இங்கு இருப்ப-