உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மாஜி கடவுள்கள்


தால்தான், இங்கு இன்னமும் காட்டேரியும் மதுரை வீரனும், இருக்கமுடிகிறது. பேகஸ், மாஜியாகிவிட வேண்டி நேரிட்டது, கிரீசிலும் ரோமிலும்! அறிவு, விரட்டிற்று, ஆபாசத்தை.

அறிவு பரவா முன்பு, குடிவகைகளை மக்கள் தயாரிப்பதற்கு, ‘அருள்பாலித்த’ தெய்வமாக, பேகஸ், விளங்கினான். புராணம், அவன் பெருமைபற்றி! பூஜாரிகள் அவன் கோயிலுக்கு!!

முழுமுதற் கடவுள் ஜுவஸ் தேவன்தான், அழகிகளைக் கண்டால், அடங்காத பசி கொள்பவனாயிற்றே, அவன் வேட்டையாடிப் பெற்ற விருந்து ஒன்றின் விளைவுதான், பேகஸ்.

பூலோகத்திலே தீப்ஸ் நாட்டு மன்னன் காட்மஸ் என்பானுக்கு செமிலி என்றோர் மகள்—அழகி—எனவே ஜுவஸ் அவளை நாடினான்—கூடினான்–தகப்பனாரைக் கேட்டுத் திருமணம் செய்துகொண்டான் போலும் என்று எண்ணுகிறீர்களா, செச்சே! அது கேவலம் மாந்தரின் முறையல்லவா, தேவன் அப்படியா செய்வார்!! அவள் அழகி, இவர் ஆண்டவன்! பிறகு என்ன!!

மானிட வடிவுடனேதான், அந்த மங்கையுடன் குலவுவார்—ஆனால், உண்மையை மட்டும் கூறாமலில்லை, ‘நங்கையே! நாம் யாரெனில், கூறுதும் கேண்மினோ! நாமே, தேவதேவன்! தேவர்கட் கரசன்! முழுமுதற் கடவுள் ஜூவஸ், நாம்தான்!’—என்று சொல்லிவைத்திருந்தார். மனதிற்கிசைந்த மணாளன் மட்டுமல்ல, விண்ணுலக வேந்தனாகவல்லவா இருக்கிறார் நமது காதலர், என்று உருகி இருப்பாள் அந்த உல்லாசி. இந்த விருந்து வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது—மனதிற்கிசைந்த ராஜா