106
மாஜி கடவுள்கள்
“நன்றாக ஏய்த்துவிட்டான் வேடக்காரன்!”
“ஏய்த்தானா...என் நாதனா...போடி பித்துப்பிடித்தவளே...ஜூவஸ்தான் அவர்!”
“அவன் சொல்கிறான் அவ்விதம், ஆனால், நீ, அந்த வடிவிலே கண்டாயா?”
“இல்லை மானிட வடிவிலேதான் இங்கு வருவார்!”
“ஏனாம்...! தேவ வடிவத்தை ஒருமுறைகூடக் காட்டாத காரணம் என்ன? கேட்டுப் பார்! உண்மையிலேயே, ஜீவசாக இருந்தால், ‘விஸ்வரூபம்’ காட்டுவார்—எத்தனாக இருந்தால் விழிப்பான்—எப்படியும் உண்மை வெளிப்பட்டுவிடும்.”
“சரி—இன்றே கேட்கிறேன்”
“சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக்கொள்ளப் போகிறான்.”
“சத்தியம் செய்யச் சொல்லிவிடுகிறேன், முதலிலேயே”
தாதி வேடமணிந்து வந்த ஹீரா தேவியார் தூபமிட்டதற்கிணங்க, செமிலி, தன்னை நாடி வழக்கம்போல வந்த ஜுவசை வற்புறுத்தலானாள், உண்மை வடிவம் காட்டு என்று. எவ்வளவோ கூறியும் பிடிவாதத்தை விடவில்லை. என்ன செய்வார்! சத்தியம் செய்துவிட்டார் முதலிலேயே—தரிசனம் தந்தாலோ செமிலியே சாம்பலாகிவிடுவாள். இந்த விபரீதமான வேண்டுகோள்மட்டும் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், செமிலி பிடிவாதம் செய்தாள். ஜீவஸ், தன் தேஜோனமயமான வடிவைக் காட்டலானார்—அவ்வளவுதான் மாளிகையும் அங்கிருந்த பொருள்களும் சாம்பலாகிவிட்டன—சுந்தரியின் கதியும்