இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- கடல் நுரையினின்றும் கிளம்பிய கட்டழகி வீனசைக் கண்டதும் கடவுளர் அனைவரும் எனக்கு, உனக்கு—என்று போட்டியிட்டனர். வீனசோ கடைகாட்டி இடையாட்டி அவர்களின் மன அலையை அதிகப்படுத்திவிட்டு, அனைவரையும் அலட்சியமாகக் கருதினாள். முழுமுதற் கடவுள் ஜுவசுக்குக் கோபம். அழகும் ஆணவமும் ஒருசேர குடிகொண்டிருந்த வீனசின் கர்வத்தை அடக்க, கடவுளர் உலகிலேயே அவலட்சணவானான், வல்கன் என்னும் கடவுளுக்கு வீனசைத் தாரமாக்கினார்.
வீனஸ்
“பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா!”—ஆஹா! ஆஹா! என்ன அழகான நடை! எவ்வளவு இன்பமான சொற்செல்வம்! இதை உணர மறுக்கும் உலுத்தரும் உளரே! உமையொரு பாகா! இவர்தம் உள்ளமென்ன கல்லோ! இல்லை, இல்லை! கல்லும் உருகும் கவிதைகள் உளவே! அவைகளையுமன்றோ அலட்சியம் செய்கின்றனர். இவர்தம் உள்ளம் கல்லுமல்ல, இரும்புமல்ல, இறைவா! இவர்கள் உள்ள மற்றவர்கள்! அதனால்தான், உன் எழிலை, உன் இலட்ச-