110
மாஜி கடவுள்கள்
ணத்தை, உன் திருவிளையாடலைத் தித்திக்கத் தித்திக்கச் சித்தரிக்கும் கவிதைகளைக் கேட்டும் சொக்காதுளர்! பாகு கனிமொழி—எவ்வளவு இனிமை, எவ்வளவு இனிமை, அன்னை வள்ளிநாயகியின், மொழி, பாகு, கனி,—ஐயன் முருகன், பாதம் வருடாதிருப்பரோ! பாதம் வருடிய மணவாளா!—என்று புகழ்பாடித் துதிக்கிறார் கவி. இவ்வண்ணம், இறைவனை இனிய கவிதையால் துதித்து பக்திரசத்தைப் பண்ணில் குழைத்தளித்த பெருமை, நந்தம் நாட்டுக் கவிவாணருக்கே சொந்தமானது. பிறநாடுகளிலே பிறந்தாரில்லை இப்படிப்பட்ட கவிவாணர்கள். இந்த அருமையினை அறிந்தாலேனும், திருந்துவரோ, இந்தத் தீயர்!!
இங்ஙனம் பேசிடும் இயல்பினர் இங்கு அநேகர்.
காவியம், போற்றப்பட வேண்டும், எனவே, அவை மூலம் தரப்படும் கருத்துக்களைக் கண்மூடி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்—முருகனுக்குப் பன்னிரண்டு கரங்கள் என்று நம்புவது முடியாது என்று முரட்டுத்தனமாகப் பேசுகின்றனர்—கவி, எவ்வளவு அழகாக, ஈராறு கரமன்றோ ஈசனார் புதல்வர்க்கு என்று பாடுகிறார், இந்தச் சுவையை உணரமாட்டாது உளரே, எதற்கும் காரணம் கேட்டலையும், மாக்கள்! என்று கடுமொழியும் பேசுகின்றனர்.
அறிவுத் துறையினின்றும் கிளம்பிய கேள்விக் கணைகளின் வேகமும் வல்லமையும் கண்டு மருண்டவர்கள், கவிவாணர்களின் புகழைக் கேடயமாகக்கொண்டு, சில காலமேனும் களத்திலே நின்று பார்ப்போம் என்று எண்ணுகின்றனர். அவர்தம் நினைப்பு, உலகிலே இங்கு போல வேறெங்கும் புராணப் புளுகுகளை, இனிய கவிதை உருவிலே தந்தவர் கிடையாது என்பது. கம்பன்போல்