உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீனஸ்

113


வீனஸ் தேவி, அப்ரோடைட் என்றோர் திருநாமமும் தேவிக்கு உண்டு.

திடீரென ஓர் நாள், கடல் நுரையிலிருந்து வீனஸ் தேவி தோன்றி, கடல் சிப்பியின் மீதமர்ந்து, கரையோரம் வந்து சேருகிறாள். கடவுளர் உலகு இதுபோன்ற எழில் மங்கையை இதுவரை கண்டதில்லையே, என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அத்தகைய அழகி மட்டுமல்ல, அம்மை, ஆவலைக் கிளரும் வல்லமை மிக்கவர்களாம்! சைப்ரஸ் என்ற தீவின் பக்கம்தான் தேவி முதலில் தரிசனம் தந்தது. இன்றும் இந்தத் தீவு இருக்கிறது—ஆனால் அதைக் காரணமாகக் காட்டி வீனஸ் தேவி, வெறும் கற்பனை என்று எங்ஙனம் கூறுவது, உண்மை உருவந்தான் வீனஸ் என்று வாதிடும் புராணீகன் அங்கு கிடையாது. புராணிகனுடைய பிடி பலமாக இருந்தபோது, வீனசுக்கு விதவிதமான விழாக்கள், அழகழகான கோயில்கள், பாமாலை, பூமாலை, யாவுந்தான்! இன்றல்ல, இருட்டறையில் மக்கள் உழன்றபோது.

கடல் நுரையினின்றும் கிளம்பிய கட்டழகி வீனசைக் கண்டதும் கடவுளர் அனைவரும் எனக்கு, உனக்கு–என்று போட்டியிடலாயினர். வீனசோ கடை காட்டி இடையாட்டி அவர்களின் மன அலையை அதிகப்படுத்திவிட்டு, அனைவரையும் அலட்சியமாகக் கருதினாள். முழுமுதற் கடவுள் ஜூவசுக்குக் கோபம். அழகும் ஆணவமும் ஒரு சேரக்குடிகொண்டிருக்கிறது இவளிடம், இவளுடைய கர்வத்தை அடக்கவேண்டும் என்று எண்ணினார். உடனே, கடவுளர் உலகிலேயே அவலட்சணவானான், வல்கன் எனும் கடவுளுக்கு, வீனசைத் தாரமாக்கினார். அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்.

வீனஸ், விண்ணவர் வியந்திடும் பேரழகி—வல்கன், கடவுளர் உலகு கைகொட்டிச் சிரிக்கும் விதமான கோர-

8