116
மாஜி கடவுள்கள்
ஒற்றைக் கண் கொண்ட ஒருவகை ராட்சதப் பிறவிகளின் துணையைப் பெற்று, அற்புதமான ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தான்.
வல்கன், தயாரித்த அற்புதப் பொருள்கள் பலப்பல.
தங்கத் தாதிமார் இருவர்—அதாவது தங்கப்பதுமைகள்—பதுமைகள் என்றாலும், தானாக இயங்கக்கூடியவை. அவன் எங்கு சென்றாலும், இந்த தங்கத் தாதிமார் உடன் செல்வர்!
பிறகு வல்கன், ஓர் அழகிய தங்கச் சிம்மாசனம் தயாரித்தான்—அது ஒரு சூட்சமமான பொறி. இதைத் தன் தாயார், ஹீராதேவிக்கு அனுப்பி வைத்தான். அம்மை அதிலே அமர்ந்ததும், அவளைச் சிம்மாசனம் சிறைப்படுத்திவிட்டது. விடுபட முடியவில்லை. விண்ணிலுள்ள கடவுளர் அனைவரும் முயன்று பார்த்துத் தோற்றனர். கடைசியில், வல்கனை வரவழைத்து வேண்டிக் கொள்வதென்ற முடிவுக்கு வந்தனர்.
“சிம்மாசனமா சிறையாகிவிட்டது! வேண்டும் வேண்டும்! பெற்ற மகன் விபத்துக்குள்ளானபோது நமக்கென்ன என்று இருந்துவிட்ட பெருமாட்டிக்கு, தக்க சிம்மாசனந்தான் அது”—என்று கூறினான் வல்கன், தன்னை நாடி வந்த கடவுளரிடம். விண்ணகம் வர முடியாது! ஹீராவை விடுவிக்க முடியாது! கடவுளர்களே! காலிழந்தவன் நான்! என் அற்புதப்பொறி அந்தச் சிம்மாசனம்—காட்டுங்கள் உங்கள் கைவரிசையை—என்று கூறிவிட்டான். திகைத்தனர் தேவர்கள்! கடைசியில் ஒரு யோசனை உதித்தது. எதற்கும் இசைய மறுக்கும் இவனை, மதுதேவனைக் கொண்டுதான், இசையச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். [மதுதேவன் பேகஸ் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.] பஞ்சமா பாதகத்திலே ஒன்று