வீனஸ்
119
வீனசும் மார்சும் விபசாரத் தடைச் சட்டத்தின்படி, தண்டிக்கப்பட்டனர் போலும்—என்று எண்ணிவிடாதீர்கள்!! கடவுளர் உலகு—எனவே, கேவலம் மானிடரைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், அங்கு, செல்லுபடியாகா! வழக்கம்போல மார்சும் வீனசும், கடவுளர் பதவிகளிலேயேதான் இருந்துவந்தனர். பக்தர்கள்கூட, இந்தக் கதையைக் கேட்டதால், மனம் பதறி, கோயிலிலேயா இருப்பது இப்படிப்பட்ட குணகேடி என்று வெறுத்துப் பேசவில்லை, மார்சை மருவினாய் போற்றி!—என்று வீனசையும், வீனசை வென்றாய் போற்றி என்று மார்சையும் தொழுதுதான் வந்தனர். கணவனுக்கு, தன் சோரத்தனத்தையே காட்சியாக்கிக் கொடுத்த பெருங்குணவதி, வீனஸ், கிரேக்க, ரோம் நாட்டவருக்கு, வரம் தரும் கடவுளரில் ஒருவளாக இருந்துவந்தாள்—பலப்பல காலம். வீனசையும் மார்சையும் மட்டுமல்ல, அவர்கள் பெற்றெடுத்த, ஹெர்மாயின், க்யூபிட், ஆண்டிராஸ், எனும் மூன்று தேவ குமாரர்களையும், வணங்கி வந்தனர். வீனஸ் தேவியின் விபசாரம், விண்ணுலகோடு நின்றுவிட்டது என்று எண்ணாதீர்கள்—மண்ணுலகத்தையும் அம்மை அவ்வப்போது பதம் பார்த்து வந்தார்கள். டிராய் நகர மன்னன் ஆன்ச்சிஸீஸ் அம்மையின் காதலுக்கு இலக்கானான். ஈனாஸ் என்ற திருக்குமாரனைப் பெற்றாள்.
மற்றோர் சமயம், வீனஸ்தேவி அடவியிலே உலவிக் கொண்டிருந்தபோது, மரம் ஒன்றுதானாகப் பிளந்தது. அதிலே ஒரு குழந்தை தெரிந்தது. வேறோர் தேவதையிடம் கொடுத்து அந்தக் குழந்தையை வளர்த்துவரக் சொன்னாள். இந்தக் குழந்தை, சுந்தரமான வாலிபனாக வளர்ந்தான்—வீனஸ் உள்ளத்திலே, காதல் மூண்டுவிட்டது மகனென எண்ணித்தான், மர இடுக்கிலிருந்து எடுத்தாள்—அரும்பு மீசைக்காகனானதும், அவன், காத-