இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வீனஸ்
121
இப்படிப்பட்ட “புண்ய கதைகளை”ப் புல்லறிவு என்று கண்டு, ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த நாடுகளெல்லாம், உலக அரங்கிலே உயரிடம் பெற்றுத் திகழ்கின்றன. கடவுட் கொள்கையிலே தெளிவும் அறிவும் துலங்குகின்றன. மார்க்கத்துறை, மக்களிடை வளரும் மாசுகளைத் துடைத்து மாண்புகளை வளர்க்கும் கருவியாக்கப்பட்டுவிட்டது. கற்பனை அலங்காரங்கள், கவிதா ரசம், என்ற காரணம் பேசி, அங்கெல்லாம், எறிந்த கட்சி எறியாத கட்சி பேசிடும் பாமரரும் கிடையாது, பெரும்பான்மையான மக்களைப் பாமரர் நிலையிலேயே இருக்கச் செய்து, சுறண்டிப் பிழைக்கும் எத்தர்களும் கிடையாது. வீனசும் மார்சும், வல்கனும் க்யூபிடும், கவிகளின் ஏடுகளிலே உள்ளனர், மக்களின் மன்றத்திலே இருந்து மறைந்தனர்—மாஜிகளாயினர்.
❖