உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யெமரின் உடலை, உலக ஆலை எனும் பொறியைச் செலுத்திக்கொண்டிருந்தவர்களிடம், தேவர்கள் தூக்கிச் சென்றனர். அகோரக் கூச்சலுடன் ஆடிக்கொண்டிருந்த அந்த ஆலையிலே பேரசுரனின் உடலைப் போட, உடல் சின்னாபின்னமாக்கப்பட்டது. எலும்புகள் மலைகளாக மாறின! பற்கள் பெருங் கற்களாயின! இரத்தம் கடலாயிற்று? உடல் உலகமாயிற்று! மண்டை ஓடு, வானமாயிற்று!

டியூட்டன்
பிரபஞ்ச உற்பத்தி

ல்லையற்ற இடம்! ஏதும் இல்லை! ஒளி, ஒலி, உருவம், புல்பூண்டு, ஒன்றும் இல்லை. பார்க்குமிடமெங்கும் நீக்கமறத் தெரிகிறது, பரந்த வெளி. வேறு எதுவும் இல்லை, கடலா அது? இல்லை! கடலெனும் உருவம் படைக்கப்படாத காலம் அது. மண்ணா, விண்ணா? இரண்டுமல்ல! மண்ணும் விண்ணும், முன்னதில் மாந்தரும், பின்னதில் சூரிய சந்திர நட்சத்திராதிகளும், அமைவதற்கும் முன்னால் இருந்தது, ஓர் பெரும் வெளி-எல்லையற்ற வெளி, காலத்தின் துவக்கம்.

இந்தப் பெருவெளியிலே, காலம், கண் விழித்தது.