128
மாஜி கடவுள்கள்
கருத்தும் கொண்டவர்களை அசுரர் என்றும், ஒளிவிடு மேனியும் தூய்மையான எண்ணமும் கொண்டவர்களைத் தேவர்கள் என்றும் கூறினர்! இருளுக்கும் ஒளிக்கும் போர்! அதனையே நமது ஆன்றோர் அசுரருக்கும் தேவருக்கும் போர் என்று கதை வடிவில் கூறினர்; ஒளியே, இருளை விரட்டி, வெல்லும். எனவே தேவாசுர யுத்தத்தில், தேவர்களே வென்றனர் என்றனர் சான்றோர். இவ்வளவு, அழகுற, ஆழ்ந்த கருத்துடன், அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்வதற்காகக் கதைகளாக்கிய, அவர் தம் திறமே திறம்!” என்று பேசி, மகிழ்வர். மகிழ்வதுடன் நில்லார். இத்தகுமதி, நமது பண்டையோர் தந்த நிதி! என்று பூரிப்பர், பூரித்ததுடன் நில்லாமல், இதுபோன்ற கற்பனைத்திறம், மதிவளம், உலகில் வேறு எங்கேனும் உண்டோ!—என்று கேட்பர்.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் உந்தியினின்றும், கொடியொன்று கிளம்பி, அதன் நுனியிலே தாமரை மலர்ந்து காட்சிதர, அந்த மலரணைமீது நான்முகன் அமர்ந்திருக்க, அவன் நாவிலே சரஸ்வதி வீற்றிருக்க, அவள் கையிலே வீணை இருந்து ஒலிக்க, அது கேட்டு இன்புற்று நாரதர் கீதம்பாட, அதற்கேற்ப நந்தி மிருதங்கம் கொட்ட, அதுகேட்டு முக்கண்ணன் நடனமாட, ஐயன் ஆடுவது கண்டு, அகிலமெலாம் ஆனந்தக் கூத்தாட, அதன் சூட்சமத்தை விளக்கிச் சுத்தானந்த பாரதியின் பேனா ஓட, அதனை மதுரகீதமாக்கி வசந்தகோகிலம் பாட..........இப்படி, இங்கு-இன்றும், பிரபஞ்ச உற்பத்திக்கு என்றோ எற்பட்ட பழைய கதையைத்தான் பயன்படுத்துகின்றனர். இவ்விதக் கதைகள், நல்லறிவை நையாண்டி செய்யும் நாச வேலையன்றோ என்பதை இந்த நல்லறிவாளர்கள் எண்ணிப் பார்க்காதது மட்டுமல்ல, இவ்விதமான கதைகளுக்கு, உட்பொருள் தேடிக் கண்-