ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி
129
டறிந்து கூறும் வீண்வேலை செய்து வருவது மட்டுமல்ல, உலகிலேயே, ஏதோ, எவருக்கும் சாத்தியமல்லாத கற்பனையை, இங்கு முன்பு இருந்தோர் கோத்தனர், என்று, நம் மக்கள் எண்ணும்படியும் பேசுகின்றனர். அந்தப் பேச்சு, எவ்வளவு அபத்தம் என்பதை எடுத்துக்காட்டவே, ட்யூடன் மக்கள் ஒரு காலத்தில் போற்றிப் புகழ்ந்து வந்த பிரபஞ்ச உற்பத்தியின் புராணத்தைக் குறித்து விளக்கினோம். கற்பனையைப் பொறுத்தமட்டிலே, ட்யூடன் புராணம், நமது பழைய புராணத்துக்கு மட்டமா? இல்லையே! அந்தப் புராணத்தை நம்பியதிலோ, நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜா காரியங்களை அமைத்துக்கொண்டதிலோ நமது மக்களுக்கு, ட்யூடன் மக்கள், எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல! நாரதரின் பக்கத்திலிருந்து தாளம் போட்டுக்கொண்டே கீதம் கேட்டவர்கள்போல இங்கு பழைமை விரும்பிகள் பேசுவதுபோலவே, ட்யூடன் மக்களும், ஆதும்லாவின் மடியிலிருந்து ஒழுகிய பாலைப் பருகியவர்கள் போலவே பேசிக்கொண்டிருந்தனர். ஆலயம் அமைப்பது, ஆறுகால பூஜை செய்வது, பூஜாரிக் கூட்டத்தின் பேச்சை தேவனின் வாக்கெனக் கொள்வது, சந்தேகிப்போரை, சித்ரவதை செய்வது, எதிர்ப்போரைக் கொல்வது, போன்ற எந்தத் திருக்கலியாண குணத்திலும், இங்கு இன்றுள்ள நமது பழைமை விரும்பிகளுக்கு எள்ளளவும் குறைந்தவர்களல்ல, அந்த நாள் ட்யூடன் மக்கள்!
ஆனால் அங்கு இப்போது, அந்தக் கதையை நம்புவோர் கிடையாது. இங்கு இன்றும் அதே போன்ற கதையை நம்பமறுப்போர், நாஸ்தீகர்கள்!
ஒரு காலத்தில், யெமரின் மண்டை ஓடு, வானம், என்று நம்பிய மக்கள், இன்று, வானவூர்தியிலே பறந்த-
9