உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி

131


இந்த ஒரு வித்தியாசம்! ஆனால் எவ்வளவு பெரிய வித்தியாசம்!! பெண் எலும்புருவாவதைத் தடுக்கத் தெரியாமல் எலும்புருவைப் பெண்ணாக்கிய பெம்மானின் கதையைப் போற்றும் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், எவ்வளவு பெரியது! அதோ தெரிகிறதே நமது இரட்டை மாட்டுவண்டி, அதற்கும், மேலே மேகமண்டலத்தூடே பறக்கும் விமானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லவா அது! காட்டேரி பூஜைக்கும் கம்பியில்லாத தந்திக்கும், இடையே எவ்வளவு வித்தியாசம்!!

பூமி எப்படி ஏற்பட்டது என்பதற்கு, ட்யூடன் மக்கள் கொண்டிருந்த, அர்த்தமற்ற கருத்தை அவர்கள் விட்டொழித்தனர்—நாமோ இன்னமும், பூமாதேவி—அண்ட சராசரங்களையும் ஆதிசேஷன் தாங்குவது—இரண்யாட்சதன் பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோய் ஒளித்துவிட்டது போன்ற கதைகளை, புண்ய கதைகள் என்று நம்புவதும், இந்த நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜைகள் செய்வதும் திருவிழாக்கள் நடத்துவதுமாகக் காலந்தள்ளுகிறோம். சரியா? மேனாட்டினர், பூமியைப் பற்றி ட்யூடன் புராண மனப்பான்மை அளவிலேயே இருந்துவிட்டிருந்தால் இன்று பூமிக்கடியில் உள்ள புதை பொருளை வெட்டி எடுக்கும் வேலை நடந்திருக்க முடியுமா, அதன் பயன்களை நாம் இன்று அனுபவிக்கிறோமே, அதுதான் சாத்தியமாகுமா! பேரசுரனின் மண்டை ஓடுதான் விண் என்ற வீண்கதையோடு மேனாட்டினர் தங்கள் அறிவுக்கு முடிவு கட்டிவிட்டிருந்தால், இன்று, ஏற்பட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்குமா!—அந்த ஆராய்ச்சியின் பலன்களை அனுபவிக்கிறோமே, அனுபவித்து அகமகிழ்கிறோமே, அப்போதாவது, அறிவுக்கு வேலை தருகிறோமா—நன்றியறிதலையாவது காட்டுகிறோமா! பழத்தைத் தின்றுவிட்டு, தோட்டக்காரன்மீது திப்பியைத் துப்பும்