138
மாஜி கடவுள்கள்
அறிந்தோர் அச்சத்தால் அடங்கிக் கிடக்க, பாமரர், பழைய குட்டையிலேயே ஊறிக்கிடக்கும் நிலை காண்கிறோம் நம் நாட்டில்.
இந்நிலை, சரித காலத்துக்கு முன்பு, டியூடானியர்களிடையே இருந்தது. அப்போது அரசோச்சிய மூல தெய்வந்தான், ஓடின்! அறிவு கிளம்புமட்டும், ஈடு இணையற்றவனாக விளங்கி வந்தான், விண்ணுலகில்.
ஆஸ்கார்டில், அதிஅற்புதமான சக்தி வாய்ந்த ஓடின், தேவிமார், தம்பிமார்கள், குமாரர்கள், குட்டிக் கடவுளர்கள் ஆகியோர் புடைசூழக் கொலுவீற்றிருந்து, ‘அண்டர்’ நாயகனாக ஆட்சிசெய்து வந்தான். அவன் ஆணைப்படி நடக்கவேண்டும் அனைவரும்—மீறுபவர் படுபாதாளத்திலே தள்ளப்படுவர்! அவன் சொல்லை ஏற்கவேண்டும் சட்டமாக, மீறினோர் அழிக்கப்படுவர். அவன் விருப்பத்தின்படியே விண்ணும் மண்ணும் விளங்கவேண்டும். அவ்வளவு பலம், ஓடினுக்கு!
ஆஸ்கார்டிலே, ஓடின் ஓர் உயரமான, உன்னதமான ஆசனத்தில் அமர்ந்திருப்பான் ஒற்றைக் கண்தான் இருந்தது. எனினும், எங்கு என்ன நடைபெறினும் அவனால் கண்டறிய முடியும்.
தங்கச் சிம்மாசனத்தின்மீது வீற்றிருக்கும் இந்தத் தனிப்பெருங் கடவுள், நீலநிறத் தலைப்பாகையும், மேகவர்ணப் பட்டாடையும் அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் காணப்படுவான். நல்ல உயரம், அதற்கேற்ற காத்திரம்! கண்மட்டுந்தான், ஒன்று!!
டியூடானிக் ஆண்டவன் இவ்வண்ணம், அலங்கார ரூபனாக வீற்றிருக்கும்போது, அவன் தோளின்மீது, இருபுறத்திலும், இரண்டு அண்டங்காக்கைகள் உட்கார்ந்து