உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

139


கொண்டிருக்கும்! காலடியிலே, இரண்டு, ஓநாய்கள் படுத்துக்கிடக்கும்! கருடன் மகாவிஷ்ணுவுக்கும், காளை சிவனாருக்கும், உண்டல்லவா!!

இந்த இரு அண்டங் காக்கைகள், அவ்வப்போது கிளம்பிப்போய், பல இடங்களிலும் நடைபெறுவனவற்றைக் கண்டறிந்து வந்து ஓடினுக்கு உரைக்குமாம்—அதனாலேயே, ஓடின் இருக்குமிடத்திலிருந்தே, எங்கும் நடைபெறும், சேதியை அறிந்துகொள்ளும் ‘சக்தி’ பெற முடிந்தது.

இரு அண்டங் காக்கைகளிலே ஒன்றின் பெயர், ‘சிந்தனை’—மற்றொன்றின் பெயர், ‘நினைவு’!

ஓநாய்களிலே ஒன்றின் பெயர், ‘பேராசை’—மற்றொன்றின் பெயர், ‘பெருந் திண்டி.’

இந்தப் பரிவாரங்களுடன் வீற்றிருந்த வண்ணம், அண்டத்தைப் பரிபாலித்து வந்தான், இந்த அதிசயத் தேவன்.

இன்று ஜெர்மனியில், பெர்லின் நகரிலோ, இங்கிலாந்தில் இலண்டன் நகரிலோ, சென்று, ஓடின் தேவனின் ஆலயம் எங்குளது, என்று கேட்டால் கைகொட்டிச் சிரிப்பர், ஓய்வுடையோர். பிறர், அதையும் செய்யார். ஓடின் ஓர் மாஜி கடவுள்! தெளிவு பிறந்ததும், இந்தத் தேவன் இறந்தான்! பகுத்தறிவு கிளம்பியதும், இந்தப் பகவான் மறைந்தார்? பாமரரும் இன்று நம்புவதில்லை, இப்படிப்பட்ட தேவனை!

எனினும் ஓர் காலத்திலே கவிவாணர் பாட, புவியாள்வோர் காணிக்கையைக் கொட்ட, பூஜாரிகள் அர்ச்சிக்க, பாமரர் பயபக்தியுடன் தொழுது நிற்க, சர்வசக்தி வாய்ந்தவராக, ஓடின், தேவாலயங்களிலே வீற்றிருந்தார்.