உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மாஜி கடவுள்கள்



அண்டங் காக்கை இரண்டுடையாய் போற்றி!
அமரர் நாயகனே, அதிபலதேவா போற்றி!
நீலப்பாகை உடையாய் போற்றி!
ஒற்றைக் கண்ணா! ஓடின்! போற்றி!

என்று தோத்திரம் செய்துகொண்டுதான் வந்தனர்.

ஒற்றைக்கண்ணன்! முக்கண்ணன் தெரியும் நமது புராணீகர்களுக்கு. டியூடானியப் புராணீகன், தான் சிருஷ்டித்த கற்பனைக் கடவுளுக்கு, ஒரு கண்தான் வைத்தான் மற்றொன்றை இழக்கச் செய்தான்.

ஓடின், தேவனாகி, தேஜோனமயனாக விளங்குவதற்காக ‘தேவரசம்’ பருக விரும்பினான். இந்தத் தேவரசத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள், நிபந்தனை விதித்தனர், ஓடினுக்கு. என்ன நிபந்தனைக்கும் இசைவேன், எனக்கு மட்டும், தேவரசம் தருக, என்று கேட்டாராம் ஓடின்.

உறுதி, கலங்காத தன்மை, தியாக உள்ளம், இவை உண்டா என்று பரிசோதிக்க விரும்பிய, தேவரசம் தயாரிப்போர், “உன் கண்களிலே ஒன்றைப் பிடுங்கி இந்தக் கிணற்றிலே எறியச் சம்மதமா?” என்று கேட்க, ஓடின், உடனே தன் இரு கண்களிலொன்றை எடுத்து எறிந்துவிட்டு, தேவரசம் பெற்றுப் பருகி, தேவனானான்!

கடவுள், ஆகிறார், கடவுள்! எப்படி இருக்கிறது. கடவுட் கொள்கை! நம்பக்கூடியதாக இல்லையே, என்பர்—ஆமாம், இன்று—! அன்று? வேதம், இது! தேவனின் திருவிளையாடல் இது! ஆத்தீகம், இதை நம்புவதுதான்!

ஆச்சரியமாக இருக்கிறதா? கடவுள் தேவரசம் பருகித்தானா கடவுட் தன்மை பெற்றார் என்பது கேட்டு!