உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

141


வேறுநாட்டு விவகாரம் இது, ஆகவே, வேகமாகக் கண்டிக்கக்கூடத் தோன்றும். இப்படிக்கூடவா, காட்டு மிராண்டித்தனமாக இருந்து வந்தனர், என்று கேலி பேசத் தோன்றும். இந்த நிலையில், டியூடன் மக்கள், இருந்தது, எப்போது? உலகப் பொது அறிவு ஏற்படா முன்னம்! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த சிந்தனைக் குழப்பம்! இது கேலிக்குரியதாகத் தோன்றுகிறது இப்போது. எனினும், இதே சிந்தனைக் குழப்பம், இன்றும் இங்கு இருக்கிறதே இதற்கு என்ன சொல்கிறீர்கள்! இதைப் போக்க என்ன செய்தீர்கள்? செய்பவர்களுக்குத் தரும் சிறப்பு என்ன? நாத்திகன், என்ற வசை!!

தேவரசம் தேடினான் தேவன் என்பது வேடிக்கை என்று கூறத்தோன்றும், டியூடன் தேவன் கதையைப் படிக்கும்போது. ஆனால் இப்போதும், நம்நாட்டு மக்கள் படிக்கிறார்கள்—படிக்கப் பக்கம் நின்று கேட்டு நெஞ்சம் நெக்குருக நிற்கிறார்களே, புராணங்களை! அவைகளிலே ஒன்று, கூர்மாவதாரமல்லவா! பகவான், ஆமையாகி, திருப்பாற்கடலிலே, மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறு ஆகவும் கொண்டு கடைந்து, ‘அமிர்தம்’ பெற முயற்சித்தபோது, மேரு, கடலுக்குள்ளே மூழ்கிவிடாதிருக்க, பகவான், ஆமையாகி, மலையைத் தாங்கிக்கொண்ட கதைதானே, கூர்மாவதாரம், இதை, இன்றும் நம்புகிறானே, நமது உடன்பிறந்தவன்! மறுத்துப் பேசுபவன், மாபாவி என்று ஏசப்படுகிறானே! இதற்கென்ன சொல்கிறீர்கள்.

தேவரசம் பருகிட ஒற்றைக்கண்ணனான ஓடினை, ஓடின் தேவனாகக் கொண்டாடப்பட்டு வந்த நாட்டு மக்களெல்லாம், மறந்து பல ஆயிரம் ஆண்டுகளான பிறகு,