144
மாஜி கடவுள்கள்
கடவுட் தன்மை என்பதை விளக்கவும், மக்கள் மனதிலே ஏற்படக்கூடிய, தீய எண்ணங்களைத் தீய்த்து, அவர்களின் மனதைத் தூய்மையானதாக்கவும், கற்பனைக் கதைகள் பயன்படட்டுமே என்று வாதிடும் போக்கினரும்கூட உண்டு, இந்நாளில்! ஆனால், இதற்குக்கூடப் பயன்பட முடியாதபடியானவைகளும், பண்புக்கு ஊறு தேடுபவைகளும் உள்ள செயல்களையே, தேவனின் திருவிளையாடல் என்று தீட்டி வைத்துள்ளனர், புராணங்களில். இப்படிப்பட்ட, “திருவிளையாடல்களைக்” கொண்டே தேவனுக்கு, சிறப்புப் பெயர்களிட்டு, அர்ச்சித்தனர்!
இம்முறையில், ஓடினுக்கு, நாற்பத்தி ஒன்பது, பெயர்கள் உண்டு—அர்ச்சனைக்குரியனவாக!
பூலோகத்தைக் காணவும், வேறு பல உலகங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஓடின், வாயுவேக மனோவேகமாக ஓடக் கூடிய ஸ்லீட்னர் என்ற குதிரை மீதேறிச் செல்வாராம்.
ஓடினுடைய அற்புதச் சக்திகளைப் பற்றிப் பெரிதும் புகழ்ந்து கதை பல தீட்டிய டியூடானிக் புராணிகர், அதே கடவுளுக்குக் கஷ்டம் வருவதும் பகைவர் அவருக்கு எதிராகக் கிளம்புவதும், சில சமயங்களிலே, ஓடின் கடவுள் தோற்று ஓடுவதும் போன்ற கதைகளையும் தீட்டினர். கடவுள், சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே, எதையும், ஆக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவரல்லவா, அவரைச் சாதாரணச் சிற்றரசன்போலச் சில சமயம் சித்தரித்துக் காட்டுகிறோமே, இது சரியா; சிந்தனைத் திறமுள்ளவர்கள் இதனை ஒப்புவரா, என்பது பற்றி எல்லாம் புராணிகன் எண்ணுவதில்லை, கடவுட் சம்பந்தமான கதைபற்றித்தான், சந்தேகிக்கவோ, ஆராயவோ கூடாதே—பாபம் என்று மதகுரு கட்டளை பிறப்பித்திருக்கிறானே! மதி