ஓடின்
145
குறைந்த மக்கள், ஏன், ஆராயப் போகிறார்கள் என்ற தைரியம் புராணீகனுக்கு. எனவே, முரண்பாடு மிகுந்த பல கதைகளைப் புனைந்தான், துணிவுடன். பக்தி காரணமாக சகலத்தையும் விழுங்கினர் மக்கள்.
இப்படிப்பட்ட, கடவுட் தன்மைக்கே முரணான கதையும் உண்டு, ஓடின் புராணத்திலே.
ஒரு சமயத்தில், ஆஸ்கார்ட் கடவுளர்களுக்கும், வான் மண்டலத்துத் தேவதைகளுக்கும் பெரும்போர் மூண்டு, ஓடின் தோற்றுவிட நேரிட்டது. ஆமாம்! மூலக் கடவுள் முறியடிக்கப்பட்டார், பரிவாரத்துடன். அவருடைய, மகன், அசகாய சூரன், தார்தேவனின் சக்தி வாய்ந்த சம்மட்டி உடைந்துவிட்டது, ஓடினின் மனம், அதைவிட அதிகமான அளவு உடைந்துவிட்டது. கடவுளர் உலகு கலக்கமடைந்தது. ஆஸ்கார்ட்—அதாவது டியூடானிய மக்கள் எதை, வைகுந்தம் என்றும் கைலாயம் என்றும் பயபக்தியுடன் கூறிவந்தனரோ, அந்தக் கடவுளர் உலகம், முற்றுகையிடப்பட்டது.
மூலக்கடவுளை முறியடிக்கக் கிளம்பிய, வான்மண்டல வீரன் பெயர், நிஜார்ட். இவன் வீரத்தின் முன்பு தாக்குப்பிடிக்கமுடியாமல், கடவுள்கள் மூலைக்கொருவராக ஓடலாயினர். வாயுவேக மனோவேகமாக ஓடக்கூடிய ஸ்லீப்னர் மீது ஏறிக்கொண்டு, ஓடின், ஆஸ்கார்டைவிட்டு, ஓடினார். அவர் மகன் தார், ஆடுகள் பூட்டப்பட்ட அற்புதத் தேர் ஏறி, ஆஸ்கார்டைவிட்டு வெளி ஏறினான்.
வெற்றி பெற்ற வான் மண்டலத்தார், ஓடின் அரசோச்சி அமர்ந்திருந்த பீடத்தில், உல் என்பவனை அமரச் செய்தனர். புதிய கடவுளானான், இந்த, உல்! கடவுள் எனும் அந்தஸ்தை இழந்து, ஓடின், தன் குடும்பத்துடன்,
10