146
மாஜி கடவுள்கள்
ஒரு பாதுகாப்பான இடம் போய்ச் சேர்ந்தான். ஜுனகத் நவாப், ஓடிவிட்டார், என்று படிக்கும்போதே சிரிப்பு வருகிறதல்லவா நமக்கு, இவனும் ஒரு மன்னனா என்று—இங்கு, கடவுள் ஓடுகிறார், தோற்று—தலை தப்பினால் போதும் என்று!!
ஓடினுடைய தம்பி, லாக்தேவன் மட்டும், புதிய கடவுளின் பொன்னடி தொழுபவன்போலப் பாசாங்கு செய்து கொண்டு, ஆஸ்கார்டிலேயே வசித்து வந்தான்.
சர்வ வல்லமையுள்ள கடவுள் தோற்று ஓடி, தனி இடம் தேடியதோடு, வான் மண்டலத்தாரை வீழ்த்த, என்ன செய்வதென்று யோசித்த வண்ணம் இருந்தார்.
ஹாப்டன், என்றோர் அசுரன் இருந்தான்—அவனுக்கோர் மகன்—அவனை, ஓடின், சிறு குழந்தையாக இருக்கும்போதே, களவாடிச் சென்று, வளர்த்துவரலானான்.
இந்த அசுர குலத்தாருக்கும் வான் மண்டலத்தாருக்கும் தீராத பகை இருந்துவந்தது—எனவேதான், அசுரக் குழந்தையை ஆஸ்கார்டு கடவுள், அக்கரையுடன் வளர்க்கலானார்—பிறகு பகை மூட்டிவிட. குழந்தை வளர்ந்தது—ஓடின், தன் மந்திர பலத்தைப் பிரயோகித்து, இந்தக் குழந்தையை ஓர் மாவீரனாக்கினான்.
ஹாடிங் எனும் இந்த அசுர வீரன், ஆஸ்கார்டு மீது பிறகு படை எடுத்துச் சென்றான் பழிவாங்கும் உணர்ச்சியுடன். தன் வேலை முடியும் வரையில் வேறு எக்காரியத்திலும் ஈடுபட மறுத்து, தலைமயிரை சடை சடையாக வளர்த்து, கத்தரித்துக் கொள்ளவில்லையாம் இந்த அசுரன்.
ஆஸ்கார்டு போகும் வழியிலேயே இந்த அசகாயச் சூரனுக்கு ஆபத்து வந்தது. லாக் தேவன், இவனைப்