148
மாஜி கடவுள்கள்
அவளுடைய கொஞ்சுமொழியில் மயங்கவில்லை, மாவீரன்—போர்—போர் என்று கொக்கரித்தான். அவளும் அவனை விடவில்லை—ஆண் உருவெடுத்து, ஆயுதம் தாங்கி அவனுடன் சென்றாள், போருக்கு.
இருவரும் பல ஆபத்துக்களைக் கடந்து, ஆஸ்கார்டுக்குப் பயணமாயினர். இடையில், மாயாவதிக்கு ஒரு பிசாசு கொடுத்த சாபத்தின் காரணமாக, ‘பெருங்கை’யால் சாவு ஏற்பட்டது.
‘பெருங்கை’—என்றால் என்ன! ஒரு கரம்! அண்டபிண்ட சராசரத்தையும் அடக்கி அழிக்கக்கூடியது! எப்போதேனும் தோன்றும்; மறையும்!
யாருடைய கரம்? புராணிகன் கூறுவதில்லை! கடவுளுக்கும் இல்லாத சக்தி, எப்படி அந்தக் கரத்துக்குக் கிடைத்தது? விளக்கம் கிடையாது! விளக்கம் கேட்கக்கூடாதே! பாபமல்லவா!! எனவே இதையும் நம்பினர் மக்கள்.
ஹாடிங், ஓர் ஓநாயை மீண்டும் எதிர்த்துப் போராட நேரிட்டது—அதைக் கொன்று, அதன் குடலைத் தின்றானாம்—உடனே, எவராலும் அடக்கமுடியாத அளவு, பலம் ஏற்பட்டுவிட்டது.
இனி அவனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பது வீண் என்று கண்டுகொண்ட, வான்மண்டலத்தார், சமாதானமாக விரும்பினர்.
ஓடினுடைய பீடத்திலிருந்த உல், தார் தேவனிடம் தூது சென்றான். சமரசம் ஏற்பட்டது. மீண்டும் ஓடின், கடவுளானான்!
இதுபோன்று, மற்றோர் முறையும் ஓடின், ‘கடவுள் வேலை’யை விட்டுவிட்டு, ஓட நேரிட்டது.