உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

149


ஹாதர் என்பவன், கிளம்பி, தன் பராக்கிரமத்தால் கடவுள்களைத் தோற்கடித்து, தேவலோகத்தைத் தன் தாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். ஓடின், தார், பால்டர் எனும் பல கடவுள்களும் ஒன்றுகூடிப் போரிட்டும், பயனில்லை. மீண்டும் ஓடின், பதவி இழந்து, நாடோடியாக நேரிட்டது. பால்டரும் இறந்துவிட்டான்.

சோகத்துடன், ஓடின், ஆரூடக்காரரிடம் சென்றான்—ஆண்டவன் போகிறான், ஆரூடம் கேட்க! ஆரூடக்காரர், உன் அவமானத்தைப் போக்கி, பழிக்குப் பழிவாங்க, உனக்கோர் பாலகன் பிறப்பான், அவ்விதமான பாலகனைப் பெற்றெடுக்கக்கூடிய பாக்யவதி ரிண்டா என்பவளை, நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

‘நாம் கோகுலத்தில் பிறப்போம் கம்சனைக் கொல்ல’ என்று அசரீரி கூறுவதுபோலத்தான், இதுவும்.

ரிண்டா எனும் மங்கை, ருதேனியர்களின் மன்னனின் மகள். அவளை அடைய விரும்பி, ஓடின், மானிட உருவெடுத்துச் சென்று மன்னனிடம் பணியாளாகி, அவன் மனம் மகிழத்தக்க பல செயல் புரிந்து, மன்னன் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, “மன்னா! எனக்கு உன் மகள், ரிண்டா தேவியை மணமுடித்துத் தரவேண்டும்” என்று கேட்டான். மாவீரனை மருகனாகப் பெறுவதிலே, மன்னனுக்கு விருப்பந்தான்—எனினும் மகளின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, மணம், என்று கூறிவிட்டான். எனவே, ஓடின், ரிண்டாவின் காதலைப் பெற முயற்சித்தான்.

அவளோ, “இவன் வீரன் என்பது சரி—ஆனால் வயோதிகன்! நானோ இளமங்கை! எனக்கோ இவன் மணாளனாவது!” என்று சீறினாள். ஓடினோ அவளை அடைந்தாக வேண்டும்—காதலுக்காக அல்லவாயினும்,