உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மாஜி கடவுள்கள்


அவளை மனைவியாகப் பெற்று, ஒரு மகனை அவள் தத்தெடுத்துத் தந்தால்தான், இழந்த மானத்தை மீட்கமுடியும்—அதற்காக அவள் வேண்டும். அவளோ, வயோதிகனை மணாளனாகக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறாள். ஓடின், விதவிதமான காதல் விளையாட்டுகளெல்லாம் செய்து பார்க்கிறார்—ஒன்றும் பலிக்கவில்லை. அவளை முத்தமிடச் சென்றாராம் ஓர் முறை, ஓங்கிக்கொடுத்தாளாம் ஓர் அறை, கன்னத்தில்!

எவ்வளவு இழிவு வருவதானாலும் சரி, பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும். பலமுறை முயன்றார் பகவான்! கடைசியில் அவளுக்குப் பிசாசு பிடிக்கும்படி செய்து, அதை ஓட்டும் மந்திரவாதியாக மாறி, அவள் மனதை மயக்கி, மணமுடித்துக்கொண்டார்.

போயி—எனும் குமாரனைப் பெற்றெடுத்தாள், ரிண்டா. இந்தக் குமாரன், தந்தையை விரட்டிய தருக்கரைத் தோற்கடித்து, ஓடினை மீண்டும் கடவுளாசனத்தில் இருக்கச் செய்தான்.

இப்படி இருக்கிறது ஓடின் புராணம்!

ஒன்றுக்கொன்று பொருத்தமோ, ஒன்றினுக்காவது பொருளோ, எதிலாவது, உண்மையான கடவுட் தன்மையோ, கடுகளவும் காணமுடியாத கதைகள். எனினும் அவைகளை, ட்யூடன மக்கள், பயபக்தியுடன் பாராயணம் செய்வதை, மதக் கடமையாகக் கருதினர். அவர்களுக்கு அந்தக் காலத்திலே கிடைத்த கம்பன்கள், காவியம் பாடினர்—ராஜாக்கள் கோயில் கட்டினர்—தம்பிரான்கள் தோன்றினர்—பக்திப் பிரவாகம், பல மண்டலங்களிலும் பெருக்கெடுத்தோடியது.

எவ்வளவு ஆபாசம், எத்துணை சதி, வஞ்சனை, நிரம்பியதாக உள்ளன இக்கதைகள்—இவைகளைக்கொண்டு,