ஓடின்
151
கடவுளுக்குப் பெருமை கற்பிக்க எண்ணுகிறீர்களே, பேதையரே! நீங்களா, உண்மை ஆத்திகர்கள்? இதுவா, மார்க்கம்? என்று, கேட்கும் துணிவும் தெளிவும் ஏற்பட நெடுங்காலம் பிடித்தது. ஆனால் தெளிவு ஏற்பட்டதும், கேட்டனர், அங்கு. கேட்டபோது, அவர்களுக்குக் கேடு செய்தனர் மூடர்கள். எனினும் அவர்கள் உண்மையை நிலைநாட்ட அஞ்சவில்லை. உயிர் பெரிதல்ல, உலகை உருக்குலையச் செய்யும் உத்தமர்களின் பிடியிலிருந்து மக்களை மீட்பதே பெரிது என்று எண்ணிப் பணிபுரிந்தனர்—வெற்றி பெற்றனர்—ஓடின் ஓட்டமெடுத்தான், கோயிலிலிருந்து!! மாஜி கடவுளானான்!
“அண்டங் காக்கையைக் கண்டேன்!” என்று புளுகு பேசிய பூஜாரிகள்—“ஓநாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு வந்தது சொப்பனத்தில்” என்று பிதற்றிய பேதையர், தெளிவு பெறுவது, எளிதான காரியமல்ல, மதவெறியை எதிர்த்து நிற்பது; ஆபத்தான காரியம். எனினும், நல்லறிவாளர்கள், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர்; விரட்டி அடித்தனர், கற்பனைகளை.
கடவுளுக்குக் குடும்பம்; அதிலே கலகம்!
கடவுளுக்கு எதிரிகள்—அதனால் அவர் தோற்று ஓடுவது!!
இவைகளை நம்பிய மக்களின் தொகை, ஏராளம், அன்று.
இன்று, அவைகளைக் கேட்டுத் துள்ளி விளையாடும் பிள்ளைகளும், எள்ளி நகையாடும்—அங்கு!
இங்கோ, இன்றும், தக்கனைச் சிவனார் கொன்ற புராணத்தை நம்ப மறுப்பவன், பாபியாகக் கருதப்படுகிறான். கடவுள்களுக்குள் சண்டை—தேவலோகத்தில் கலகம்—