உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மாஜி கடவுள்கள்


ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிப்பது—என்பன போன்ற புராணக் கதைகளை, புண்ய கதைகளாகக் கொண்டு, புத்தியின் போக்கையே, பாமரர் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

எவ்வளவோ கோலாகலமாக ‘வாழ்வு’ நடத்திய, ஓடின், மாஜி கடவுளானதை, நம் நாட்டுப் பாமரர் அறியார். அறிந்தவர்கள் உரைக்கவும் அஞ்சுகின்றனர்!