இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- தார் தேவன், ஓடின் தேவனின் குமாரன்; பல திருக்குமாரர்கள் ஓடினுக்கு, எனினும் தார் தேவனே, முதல்வன், முக்கியமானவன், தந்தையை மிஞ்சக்கூடிய வல்லமை பெற்றவன், தரணியோரின் பக்தியையும் பாசத்தையும் அதிக அளவில் பெற்று, ஆதிக்கம் செலுத்தினவன். இந்த ஆற்றல் மிக்க கடவுளுக்கு, இரண்டு ஆடுகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலேறித்தான் அண்டமெங்கும் சென்று வருவார் இந்த அதிசூரர்.
தார்தேவன்
சுதர்சனம்—என்பது அவருடைய சக்ராயுதத்தின் பெயர்—பாஞ்ச சன்யம் என்பது அவருடைய, சங்கின் பெயர், என்று நம் நாட்டுப் புராணிகர்கள், விஷ்ணுவுக்காகக் கட்டிய கதைகளிலே கூறினர். ட்யூடன் புராணிகன், இதுபோலவே, கடவுள்களுக்குப் பெயர் சூட்டியதுடன், வாகனங்களுக்கும் பெயரிட்டான். மக்கள் கடவுளின் திருநாமத்தைப் ‘பஜித்தது’ போலவே வாகனங்களையும் கருவிகளையும், பஜித்து வந்தனர்.
ஆக்கவும் அழிக்கவும், ரட்சிக்கவும் தண்டிக்கவும், ஆற்றல்கொண்ட ஒரு முழுமுதற் கடவுள் போதும், என்ற அளவில், ஆத்திகம் அமையவில்லை. பலப் பல கடவுள்களைத் தேடவும் நாடவும், ஒவ்வோர் கடவுளைப் பற்றி ஒவ்-