மாஜி கடவுள்கள்
3
பெற்றவன். எப்படி இருக்கிறது, உங்கள் கடவுளின் குடும்ப விவகாரம்! தூய்மையால், தேவர் உலகு புகுந்தவனின் மனதிலே மோகம் குடிபுகுந்த காரணம் என்ன? இறைவனின் இல்லத்திலேயே இத்தகைய இழி செயல் புரியும் துணிவு கொண்டவன், எப்படிப் பரமனின் அருளுக்குப் பாத்திரமானான்?
“ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா, கூறுங்கள். மக்களின் மனதுக்கு எட்டாதவராக, கடந்தவராக உள்ள கடவுளைப்பற்றி இவ்விதமான ஆபாசமான கதைகள் இருக்கலாமா? அவைகளை நீங்கள் புண்ய கதைகள் என்று நம்புவதா? இப்படித்தானா இறைவனைத் தெரிந்து கொள்ளும் முறை இருக்க வேண்டும்? தேவியாரைப் பற்றியும், முக்திபெறுகிற அளவு பக்குவமான பக்தி செய்தவனின் யோக்யதை பற்றியும் ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் முழுமுதற் கடவுள ஜூவஸ் இருக்கிறாரே, வானமுட்டும் கோயில் கட்டி, வணங்கித் திருவிழாக்கள் பல நடத்திவருகிறீர்களே ஜூவசுக்கு, அவருடைய கதை இருக்கும் விதத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!”
“ஐவஸ், முழுமுதற் கடவுள் அவர் செய்தது என்ன? தந்தையைத் துரத்தி அடித்தார், அதிகாரத்தைக் கைப்பற்றினார், தகப்பனின் அரச பீடத்தில், துராக்கிரகமாக ஏறிக்கொண்டு, தன் சதிச் செயலுக்கு உடந்தையாக இருந்த தம்பிமார்களுக்கு அதிகாரத்தில் கொஞ்சம் பங்கு கொடுத்துக் கடவுளானார்! தங்கையைத் தாரமாகக் கொண்டார்! அதிகார வெறி, சதிச்செயல், சூது, சூழ்ச்சி, சொந்த சுயபோகத்திலே மிகுந்த அக்கரை கொண்டவர் ஜுவஸ்-அவரைப்பற்றி நீங்களே கூறும் கதையின்படி பார்த்தால். ஆனால் அவர்தான் உங்கள் கடவுள்! கடவுளின் இலட்சணம் இதுதானா? தகப்பனைத் தவிக்கவிடுவதும், தங்கையைத் தாரமாக்கிக் கொள்வதுந்-