156
மாஜி கடவுள்கள்
முருகனின் வேலாயுதம், சிவனாரின் சூலாயுதம், விஷ்ணுவின் சக்ராயுதம் போலவே, தார் தேவனுக்கு ஒரு சம்மட்டியாயுதம்—அதற்கு ஒரு திருநாமம்! வேலும் சூலமும், சக்கரமும் சங்கும், பூஜைக்குரியனவாகக் கருதப்படுவது போலவே, ஆதி நாட்களில் ட்யூடன் மக்கள், முஜோல்னரைப் பூஜைக்குரிய புனிதப் பொருளாகக் கருதினர்.
இந்த ஆற்றல்மிக்க கடவுளுக்கு, இரண்டு ஆடுகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலேறித்தான், அண்டமெங்கும் சென்று வருவார், இந்த அதிசூரர்.
தகப்பனாம் ஓடினுக்கு, வாயுவேக மனோவேகமாகச் செல்லக்கூடிய குதிரை இருந்தது என்று புரரணிகன் புகழ்ந்தபோது, அற்புதமான குதிரை! தேவாம்சம் பெற்ற புரவி! என்று பக்தர்கள் கொண்டாடினர்; அதே பக்தியுடனேயே, தார் தேவனின் ஆடுகளையும் கொண்டாடினர்! கருடன், மயில் இரண்டையும் இங்கு ‘பாமரர்’ ஒரேவிதமான பக்தியுடன்தானே கொண்டாடுகின்றனர்!
கொண்டாடினர்!—அங்கு. கொண்டாடுகின்றனர்!!—இங்கு. இறந்தகாலம், அங்கெல்லாம். நிகழ்காலம், இந்நாட்டிலே!!
பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்குமாம், ‘தர்மயுகத்தில்’ அப்போதும், தப்பித்தவறி, புலி சற்று, பகை உணர்ச்சியைக் காட்டினால்போதும், வைகுந்தநாதனின் ‘சுதர்சனம்’ பறந்து வந்து, புலியின் சிரத்தை அறுத்தெறிந்து, விடுமாம், என்று இன்றும் பாமரர் கதை பேசுகிறார்களல்லவா, அதுபோலவே, முன்னாட்களில், மூடமதியினராக, ட்யூடன் மக்கள் இருந்து வந்தபோது, உலகிலே, எங்கேனும், ஏதேனும், அக்ரமம்