உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார் தேவன்

157


நேரிட்டால், உடனே, தார்தேவனின் ‘சம்மட்டி ஆயுதம்’ கிளம்பும், அக்ரமத்தை நொருக்க, என்று கதை பேசிக் காலந்தள்ளி வந்தனர்.

தார்தேவனின் இந்தச் சம்மட்டியின், சக்தியை விளக்கப் பலப்பல கதைகளைக் கட்டினர் புராணிகர்கள்—பல பாசுரங்களை இயற்றினர் புலவர்கள்—பக்தர்கள் பாடிப் பரவசமடைந்தனர்—பூஜாரிகள் கொழுத்தனர். இன்று ட்யூடன் இனத்தின் வாழையடி வாழையாக உள்ள, மக்களிடம் சென்று தார்தேவனின் திருவிளையாடலைக் குறித்துக் கேட்டால், கைகொட்டிச் சிரிப்பர், நமது நாட்டவர் போல, திருவிளையாடற் புராணத்தை எடுத்துக் கொடுத்து, பூரிப்படையார்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஆழ்கடல், பூமி, எனும் எல்லாவற்றையும் படைத்துள்ள சக்தியே, கடவுள், எனவே, வேறு யாருக்கும், வேறு எந்தப் பொருளுக்கும், இல்லாத வலிமையும் மகிமையும், உள்ளவரே, கடவுள், என்று இன்று பேசப்படுகிறது. இது தெளிவுபெற்ற ஆத்திகம் என்றும் கூறப்படுகிறது. முன்பு, இந்தத் ‘தெளிவும்’ கிடையாது. கடவுளுக்கும், மற்றவர்களுக்கு நேரிடுவது போலவே, கஷ்டம், ஆபத்து, பகை, பாசம், சஞ்சலம், ஏற்படும்! சில சமயம், தோல்வியும் துயரமும் உண்டாகும்! சில வேளைகளில் கடவுள் விரட்டப்படுவார், விண்ணுலகை விட்டே!! பிறகு, மீண்டும் போரிட்டு, ‘ராஜ்யத்தை’ மீட்டுக் கொள்வார்! இப்படி எல்லாம் புராணங்கள்.

கடவுளைப்பற்றி இவ்விதம் கதைகளைக் கட்டுகிறோமே, இவைகளைப் படிக்கும்போது, ஒரு காட்டரசனுக்கும் கடவுளுக்கும், என்ன பேதம் என்று மக்கள் எண்ணக்கூடுமே,