தார் தேவன்
159
சிங்கமுகாசூரன்...மகிஷாசூரன்—என்று பகைவர்களும், அவர்களைச் ‘சம்ஹரிக்க’ பகவான் கிளம்பியதுமான கதைகளை, இன்றும் நம்நாட்டுப் பாமரமக்கள் எவ்வளவு பக்தி சிரத்தையுடன் கேட்டு ரசிக்கின்றனர்! பாமரர் மட்டுமா? பாராளுமன்ற நிபுணர்களும்கூட அல்லவா, இத்தகு பச்சைப் புளுகுகளைப் பரப்புவதற்குக் கிளம்புகின்றனர், வெட்கத்தை விரட்டிவிட்டு, பாமரன், சொல்வதை அப்படியே நம்புகிறான்—அதாவது, மகிஷாசூரன் என்றால், எருமைக்கடா முகம்கொண்ட சூரன், என்று உள்ளபடி நம்புகிறான்—பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் பேர்வழியோ, இதற்கு ஒரு தத்துவார்த்தம் கூறுவார்—எருமைக்கடா முகம் என்றால், எருமை முகம் என்றே பொருள் அல்ல...வலிமையும் கொடுமையும் விளங்கிடும் விதமான முகம் என்பது தத்துவார்த்தம் என்று கூறுவார். இவ்வுளவே வித்தியாசம்! என்னதான் தத்துவார்த்தம் கூறினாலும், அறிவுக்குப் பொருந்தாததும், எத்தகைய மாண்பையும் வளர்க்க முடியாததும், கடவுட் கொள்கைக்கே ஊறுதேடுவதுமான கதைகளைப் பாமரரிடம் பரவவிடுவது தீமையைத் தருமே, தெளிவை உண்டாக்காதே, என்பதுபற்றி, இந்தக், கற்றும் மற்றவர் போலவே உள்ளவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்விதமான கதைகளின்மீது கட்டப்பட்டுள்ள, கோகுலாஷ்டமி, ராமநவமி, சிவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, அவிட்டம், போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி பாமரரை மேலும் பாழ்குழியில், தள்ளும் பணிபுரிகின்றனர்.
தார் தேவனின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, திருவிழாக்களும், பண்டிகைகளும் நடத்திக் கொண்டு வந்த ட்யூடன் மக்களிடையே அறிவுத் தெளிவு ஏற்பட்டு, அவர்கள் உண்மை ஒளியைக்கண்டு, உலகிலே