160
மாஜி கடவுள்கள்
உயர்ந்த நிலை அடைந்தனர். இதற்கான வழிகளிலே. அந்நாட்டு அறிவாளிகள் பணிபுரிந்தனர்.
கடவுளுக்குப் பெண்டுபிள்ளை இருப்பதாகவும், போரும் பகையும் காதலும் கேளிக்கையும் உண்டு என்பதாகவும், எண்ணுவது மடைமை என்று இடித்துரைத்தனர்–வெறி கொண்டவர்களின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள், உண்மை கூறுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. இன்னல் பல ஏற்பட்டன! இழித்தும் பழித்தும் பேசப்பட்டனர்! சொல்லொணாக் கொடுமைகளுக்காளாயினர், எனினும், பாமரரின் மனப்பிராந்தியை ஓட்டாமல் விடுவதில்லை என்று சூள் உரைத்துச் சொந்த வாழ்வை மறந்து பணி புரிந்தனர், வெற்றி கண்டனர்—தார் தேவன், மாஜி கடவுளானான்.
ஒரு அரசனை விரட்டுவது என்பதே, எவ்வளவோ ஆபத்தான காரியம். மன்னன் என்றால் அவனிடம் படை உண்டு; கோட்டை கொத்தளம் உண்டு; கொலைகாரர் பலர் உண்டு; அவன் பக்கம் நின்று பணி புரிவதைப் புண்ணிய காரியமாகக் கருதும் பாமரர் கூட்டம் உண்டு, பணம் உண்டு! இவ்வளவையும் எதிர்த்து, மன்னனை விரட்டி மக்களாட்சியை அமைப்பது, புரட்சி என்பர்!
இதற்கே, எவ்வளவோ பேர், களத்திலே பிணமாக நேரிட்டிருக்கிறது! கொட்டிய இரத்தம் கொஞ்சமல்ல! சித்திரவதைகள், எவ்வளவோ! சிறையிலே வாடினவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள், ஏராளம்!
ஒரு மன்னனை விரட்ட இவ்வளவு கஷ்டம் என்றால், மக்களால், தலைமுறை தலைமுறையாகக் “கடவுள்” ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழப்பட்டு, வந்த ஓடின், தார், எனும் தேவர்களை மாஜிகளாக்குவதற்காகச் செய்யப்பட்ட