உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மாஜி கடவுள்கள்


தானா, தயாபரனின் திருக்கூத்தாக இருக்கவேண்டும்? கூசாமல் கூறுகிறீர், இவைகள் கடவுளின் திருக்கூத்து என்று. இவைகளை நான் எடுத்துக் காட்டினாலோ, நான் கடவுளை ஏசுகிறேன் என்று கோபிக்கிறீர். கோபமின்றிக் கூறுங்கள், கடவுளின் இலட்சணம் இப்படி இருக்கலாமா? எவ்வளவு காமச் சேட்டை செய்தார் என்று கதை கூறுகிறீர்கள். மகாஜனங்களே! இப்படிப்பட்ட யோக்யதையுள்ள கடவுளால், என்ன நன்மை, என்னவிதமான ஒழுக்கம் ஏற்படமுடியும்? உங்களின் கடவுள் இப்படிப்பட்ட இலட்சணம் பொருந்தியவர் என்பது தெரிந்தால், உலகம் உம்மைக் கேலி செய்யாதா? அறிஞர்கள் உங்களை மதிப்பார்களா? காமப் பித்தம் கொண்டு அலைவது கடவுட் கொள்கையா! எவ்வளவு கேவலம்! எவ்வளவு அறிவீனம்! எவ்வளவு கோரமான உருவங்கள் கோயிலிலே! அவைகள் முன்னின்று என்னென்ன கோணற சேட்டை செய்கிறீர்கள்! நரபலி கேட்குமோ தெய்வம்! நாலு தலை, பத்துக்கை, பலவித முகம் கொண்டு இருக்குமோ? இப்படியோ, இறைவன் இருப்பார்? இதுவோ மதம்? இதுவோ மதி? இதற்கோ நாட்டுப் பெருநிதி பாழாக வேண்டும்? சேச்சே! எவ்வளவு கேவலம், மோசம்.”

கிரேக்க நாட்டிலே, கிருஸ்து பிறக்குமுன்பு, ஐந்தாம் நூற்றாண்டிலே, ஆண்டவன் பெயரால் நடத்தப்படும் ஆபாசங்களைக் கண்டித்து, கடவுளைப்பற்றிக் கயவர்கள் கட்டிவிட்ட கதைகளை விளக்கி, மக்களுக்கு மதி புகட்ட வேண்டுமென்று, மேற்கண்டவாறு கர்ஜனை புரிந்து வந்தார். டையகோராஸ் (Diagoras) என்ற அறிஞர். அவருடைய அறிவுரை, மக்களுக்கு ஆத்திரமூட்டிற்றேயொழிய அறிவு விளக்கத்தை அளிக்கவில்லை.

“ஆஹா! எவ்வளவு வாய்க்கொழுப்பு இவனுக்கு? எவ்வளவு நெஞ்சு அழுத்தம்? நமது கடவுளரைப் பழிக்-