உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மாஜி கடவுள்கள்


ரனே திடுக்கிட்டுப் போனான்—அதேபோது கோபமும் பிறந்தது. ஏனெனில், யார், தனக்குச் சமமாகச் சாப்பிடவில்லையோ அவர்களைக் கொன்றுவிடுவது, அவன் சபதம். மிகச் சாதாரண உருவுடன் உள்ள தார், எப்படியும் தன் அளவு சாப்பிடமுடியாது, ஆகையால் அவனைக் கொன்றுவிட முடியும் என்று எண்ணித்தான். அசுரன், மூன்று எருதுகளைப் பொசுக்கிவைத்தான் விருந்துக்கு—தார் தேவனோ, இரண்டு எருதுகளை விழுங்கிவிட்டார் ஆகவே கொல்வதற்கில்லை! இந்தத் துயரம் தாக்கிற்று அசுரனை.

அந்த நாள் பக்தர்கள் முன், பூஜாரி பாடியிருப்பானல்லவா, இதுபற்றி! இப்போது காளிகோயில் பூஜாரி பாடுகிறானே, பல்லுக்கு பல் காதம், பல்லிடுக்கு முக்காதம், என்று, உடனே பக்தர்கள், ஆமாமாம் ஆமாமாம், என்று ஆமோதிக்கிறார்களல்லவா, அதுபோல.

தார் தேவனின் திருக்கோயிலில், திருவிழாச் சமயத்திலே, கூடியுள்ள பக்தர்கள் முன்னிலையில் பூஜாரி,


நாய்முக அசுரன் கண்டான்
நமதரும் தார்தேவனை!
நாலில் ஒன்று குறையக் காளை
நல்ல கறி சமைத்து வைத்தான்
பாரெல்லாம் அறிய அப்போ
பகவானும் என்ன செய்தார்!
பாவிமகன் செய்யும் சூது
படுசூரண மாகவேதான்,
காளை இரண்டைக் கனவேகத்தில்
மென்று தின்று ஏப்பம் விட்டார்!

என்று பாடித்தானே இருப்பான்—பக்தர்கள் பரவசமடைந்துதானே இருப்பர்!