உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார் தேவன்

167


இவைகள், தேவனின் திருவிளையாடல்களாக, தெளிவில்லாத மக்களால் அந்நாளில் கொண்டாடப்பட்டன—இப்போதல்ல. இப்போதும், மலை மலையாக இருந்த சோற்றைத் தின்று வைகை ஆறு முழுவதையுமே குடித்துத் தீர்த்த குண்டோதரன் கதையைப் புண்யம் பெறக் கேட்டு ஆனந்திக்கும் போக்கு, நம் நாட்டிலே இருக்கிறது—வேறெங்கும் இல்லை!!

தார் தேவனின் இந்தத் திருவிளையாடலால் திடுக்கிட்டுப்போன, ஹைமர், மறுநாள், வழக்கப்படி, மீன் பிடிக்கச் சென்றான்—தார் தேவனும் உடன் கிளம்பினான்.

“பயலே! என்னோடு வராதே! ஆபத்துகள் எனக்குப் பூச்செண்டுகள்! உன்னால் ஆகாது, என்போல, விளையாட போ, போ!” என்றான், அசுரன்

“ஆபத்துகள் எனக்கு உதிர் சரகுபோல!” என்றான் தார்.

“நான் ஆழ்கடலின் நடுவே சென்று மீன் பிடிப்பவன்! அலை மலையென எழும்பும்! அறியாச் சிறுவனே! அங்கு வந்தால் அச்சம் உன்னைத் தாக்கும். வீட்டிலேயே இரு” என்கிறான் அசுரன்.

“கடலின் மறுகரை சென்று, கிளிஞ்சல் எடுக்கவும் நான் தயார், நீ கிளம்பு” என்றான் தார் தேவன்.

இருவரும் கிளம்பினர் படகில். படகு, செல்கிறது, செல்கிறது, பயங்கரமான வேகத்தில்; தார் தேவன், திகில் கொள்ளவில்லை. கடைசியில் மீன் பிடிக்கலாயினர். அசுரன் பிரம்மாண்டமான மீன்களைப் பிடித்துக் காட்டினான், தன் ஆற்றலை விளக்க! தார் சும்மா இருப்பாரா! தன் ஆற்றலை விளக்க அவரும் மீன் பிடிக்கலானார். தூண்டிலை