தார் தேவன்
169
வீட்டிலே, தார் தேவனின் பலத்தைப் பரீட்சிக்க, வேறு பல சோதனைகளை நடத்தினான் நாய்முகாசூரன்—தாருக்கே வெற்றி. கடைசியாக எந்தப் பாண்டத்துக்காக வந்தாரோ, அதையே காட்டி, “நீ பலசாலி என்பது உண்மையானால், அந்தப் பாண்டத்தைத் தூக்கிக்கொண்டு, நடந்துகாட்டு, பார்க்கலாம்” என்றான் அசுரன். தார் தேவன் இதுதான் சமயமென்று, பாண்டத்தைத் தூக்கிக் கொண்டு, நடக்கலானான்—அசுரன் பின் தொடர்ந்தான், ஆனால் பிடிக்கமுடியவில்லை. தாரும் டையரும், பாண்டத்தை எடுத்துக்கொண்டு பல லோகங்களையும் கடந்து, சமுத்திர தேவனிடம் வந்து சேர்ந்தனர். பாயசம் அந்தப் பாண்டத்தில் காய்ச்சப்பட்டு, கடவுள்கள் பருகிக் களித்தினர்.
பாயசம் காய்ச்சும் பாண்டம் தேடி, தார் தேவன் நடத்திய திருவிளையாடலைப் போல, பலப் பல உண்டு. அவ்வளவும், அறிவுக்குத் துளியும் பொருந்தாதன—எனினும் அவைகளை நம்புபவனே ஆத்திகன்—மறுப்பவன் நாத்திகன், என்றனர் அந்த நாள் மதவாதிகள்.
❖