உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாக் தேவன்

171


“அப்படியா விஷயம்! அவனிடம் பயம் என்று சொல்லு!!”

“ஆமாம்! அவன் படுபாவியாயிற்றே, பயப்படாமல் என்ன செய்வது”

இப்படிப்பட்ட உரையாடலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஊர்ப் போக்கிரியைப் பற்றி. போக்கிரியிடம் சிக்கிக் கொள்வானேன் என்பதற்காகவே, அவனிடம் மரியாதை காட்டுவர், சற்று முன் ஜாக்ரதையும், பயங்கொள்ளித்தனமும் உள்ளவர்கள். மனிதர்கள் விஷயமாக இப்படி நடந்து கொள்வதே, மானக் குறைவு என்றும், கேலிக்குரியது என்றும் எண்ணுவர் பலர். சில கடவுள்கள் விஷயமாகவே இப்படிப்பட்ட ‘போக்கு’ காட்டினர், பக்தர்கள்!

அக்கமக்காரக் கடவுள்! கொலைக்கு அஞ்சாத கொடியவன்! கலகமூட்டுவதையே தொழிலாகக் கொண்ட கடவுள்!—இப்படியும் ஒரு கடவுள் உண்டு, ட்யூடானியருக்கு;—சனிபகவான்—நாரதர், இல்லையா நம் நாட்டவருக்கு, அதுபோல அடுத்துக் கெடுத்தல், அக்ரமத்துக்கு உடந்தையாக இருப்பது—அகப்பட்டதைச் சுருட்டுவது ஆகிய ‘திருக்கலியாண குணங்கள்’ கொண்ட தேவனும் உண்டு—அவனுக்கும் தேவாலயம் உண்டு—போக்கிரியிடம் புன்சிரிப்புடன் பேசித் தப்பித்துக் கொள்வது போல, இந்த அக்ரமத் தேவனுக்குப் பூஜை செய்து, அவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்வர், ட்யூடன் பக்தர்கள். கடவுள், அன்பின் ஊற்று, அன்பின் உருவம், அன்பு வேறு கடவுள் வேறு அல்ல, என்பதெல்லாம், கடவுட் கொள்கையில் ‘நாகரிகம்’ புகுந்த பிறகு, தீட்டப்பட்ட தத்துவங்கள். பழங்காலக் கோட்பாட்டின்படி, கடவுளரிலும், ‘கெட்டவர், நல்லவர்’ உண்டு; பக்தர்கள், இருவகையினரையும் பூஜித்தாக