172
மாஜி கடவுள்கள்
வேண்டும், அதுதான் ஆத்திகம், மதம். இப்படி இருக்கக்கூடாதே, கடவுளின் இலட்சணம் இது அல்லவே என்று பேசுபவன், நாத்திகன், மதவிரோதி!
வாயில் மூக்கில் இரத்தம் வந்துவிடும்—மரம்போல முறித்துக் இழே போட்டுவிடுவாள்—கண் குருடாகிவிடும்—வாய் அடைத்துப் போகும்—இன்ன தெய்வத்தின், கோபம் கிளம்பினால், என்று இப்போதும், பட்டிக் காட்டவர் பேசுகிறார்களல்லவா! அதுபோன்ற நிலை ட்யூடன் மக்களுக்கு முன்பு இருந்தது; இப்போதல்ல! அந்த இருட்டறையிலிருந்து அவர்கள் வெளியேறி, பகுத்தறிவுப் பகலவன் உள்ள பரந்த வெளிக்கு வந்துவிட்டனர்.
இருட்டறையில் அந்த மக்கள் இருந்தபோது, முழுமுதற் கடவுள் ஓடின், அவன் குமாரன் தார், எனும், அதிசூரர்களை—அண்டத்தை ரட்சிக்கும் காவலர்களைப் பூஜித்ததுடன், கேடு செய்யும் கடவுளையும் கும்பிட்டுத்தான் வந்தனர். லாக் தேவன் அப்படிப்பட்ட, அக்ரமக் கடவுளரில் ஒருவன்—ஓடினுக்குத் தம்பி—தார் தேவனுக்குச் சிற்றப்பன்.
சிண்டு முடிந்து விடுவதுதான் லாக் தேவனுக்குப் பொழுதுபோக்கு.
மானிடர், மனதிலே மாசும் தூசும் நிரப்புவான்—அதுமட்டுமா! கடவுளர் உலகிலேயே, கலகமூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான், இந்த லாக்!
லாக்கின் அக்ரமச் செயல்களால், கடவுளர் உலகே அடிக்கடி அவதிக்கு ஆளாகுமாம்.
காட்டு ஜாதித் தலைவர்களுக்குள் மூண்டுவிடும் பொறாமை உணரச்சி, கடவுளர் உலகிலும் இருந்திருக்கிறது—புராணத்தின்படி. லாக் தேவனுக்கு, ஓடினின்