லாக் தேவன்
175
ராட்சசனோ, மளமளவென்று கட்டிவிட்டான் மதிற்சுவரை—ஒரே நாள் வேலைதான் பாக்கி. கடவுளர் உலகு கலங்கிற்று—லாக்மீது பாய்ந்தனர், உன்னால்தானே இந்த ஆபத்து என்று. தன் உயிருக்கு உலை வைத்துவிடுவார்கள் என்று கண்டுகொண்ட லாக், மாயக் குள்ளனின் மந்திர சக்தி வாய்ந்த குதிரையினாலேயே அந்த மகத்தான மதிற்சுவர் கட்டப்படுகிறது என்பதை அறிந்து, அந்தக் குதிரையை மயக்க, ஒரு பெண் குதிரையை ஏவினான்! இரு குதிரைகளும் கானகம் சென்றன காதல் விளையாட்டில் ஈடுபட; வேலை தடைப்பட்டது, குறிப்பிட்ட காலத்திலே சுவர் கட்டி முடிக்காததற்காக, ராட்சசன் கொல்லப்பட்டான். பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் போக்கு இந்த லாக்குக்கு.
இவ்விதமாகவே இடர்கள் பல உண்டாக்கிக் கொண்டே இருப்பது இந்தக் கடவுளின் வேலை.
ஒருமுறை சிப் என்ற சிங்காரத் தேவதையின், அலங்காரக் கூந்தல் தனக்கு வேண்டுமென்று கேட்டாளாம், லாக்கின் காதலி! சிப், தூங்கும்போது, கூந்தலைக் கத்தரித்து எடுத்துவிட்டான் லாக், கோபம் கொதித்தது கடவுளருக்கு—பிடித்துத் தாக்கலாயினர். கூந்தலைத் திருப்பித் தந்துவிட்டதுடன், அருமையான ஆயுதங்களை மந்திர சக்தி வாய்ந்த கொல்லர்களைக் கொண்டு செய்வித்து, கடவுளருக்குப் பரிசாகத் தந்து, கோபத்தைத் தணியச் செய்தானாம், இந்தக் கோணல் புத்தி படைத்த கடவுள்.
பரிசாகக் கிடைத்த ஆயுதங்களைப் பெற்று, அவைகளைச் செய்த கொல்லர்களைக், கடவுளர்கள் பாராட்டினராம்—அதை வேறு, கொல்லர்களிடம் சென்று கூறி, போட்டி பொறாமையை மூட்டிவிட்டானாம் லாக். அந்தக் கொல்லர்கள், அவற்றைவிட அருமையான ஆயுதங்களைச் செய்து