மாஜி கடவுள்கள்
5
கிறான் பாபி! இவன் நா புழுக்காதா? இவன் மீளா நரகம் சேர்வான்” என்று மக்கள் கோபத்துடன் பேசினரே தவிர, அறிஞன் கூறுவது அவ்வளவும் மறுக்கமுடியாத உண்மையாகவன்றோ இருக்கிறது, என்று தெளிவு அடையவில்லை.
தெளிவு பிறவாத நிலையிலே அந்த மக்கள், அறிவும் சுடர் கொளுத்திய டையகோராஸ், அழிக்கப்படவேண்டும் என்று கொக்கரித்தனர். ஊர் திரண்டது உண்மையை உரைத்த உத்தமனை ஒழிக்க. டையகேராரஸ், தான் பிறந்த (Melos) மீலாஸ் என்னும் ஊரைவிட்டு ஓடி, காரிநித் என்ற தேசத்தில் தங்க நேரிட்டது. கி. மு. 500-ல், கடவுள் பெயரால் பரப்பப்பட்ட பொய்க்கதைகளைக் கண்டித்த அறிஞனின் கதி, அவ்விதம் இருந்தது. அறிவு புகட்டச் சென்றான், ஆத்திரம் கொண்ட மக்களால் அவதிப்பட்டான். ஆனால் வெற்றிபெற்றவன் அவனே! ஓட்டம் பிடித்தவனை, எப்படி வெற்றி வீரன் என்று புகழ்வது? ஐனங்களின் ஆத்திரத்தைக் கண்டு அஞ்சி, உயிர் தப்பினால்போதும் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டவனல்லவா அந்த டையகோராஸ். அவனுடைய கோழைத்தனத்தைப் பரிகசிக்க வேண்டியதுதானே முறை; ஏன் அவன் ஓடினான்? என்று கேட்கவே எவருக்கும் தோன்றும். டையகோராஸ், உயிருக்குப் பயந்து ஓடினவன்தான்; உண்மை. அச்சம் இருந்தது அந்த அறிஞனுக்கு; உண்மை. ஆனால் அவனே வெற்றிபெற்றவன். அந்த உண்மையை அறிய, அவனுடைய வாரிசுகளைக் கவனிக்கவேண்டும். டையகோராஸ், மீலாஸ் நகரைவிட்டு ஓடி, காரிநித் தேசம் சென்றான். அங்கேதான் அவன் இறந்ததுங்கூட. ஆனால் மறுபடியும், அவன் உலவினான் கிரேக்க நாட்டுக் கடைவீதியில். முன்பு ஓடிப்போன டையகோராஸ் சொன்னவைகள்போல இதோ இவன் சொல்கிறானே என்று கிரேக்கர் மறுபடியும்