உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மாஜி கடவுள்கள்


தந்தனராம். அப்படிச் செய்யப்பட்ட ஆயுதங்களிலே ஒன்றுதான், தார் தேவனின் சம்மட்டி!

அதை ப்ரோக் எனும் தேவக் கொல்லன் செய்து கொண்டிருக்கும்போது, லாக், வண்டு வடிவம் கொண்டு கொட்டினான். அதை சகித்துக்கொண்டு சம்மட்டி செய்து, தார் தேவனுக்குத் தந்துவிட்டு, லாக் தேவனின் தலை தனக்கு வேண்டும் என்று நிபந்தனை விதித்தான், ப்ரோக், லாக், தந்திரமாக, “சரி! தலையை எடுத்துக்கொள்–ஆனால், ஜாக்கிரதை—கழுத்தை ஒன்றும் செய்யக்கூடாது” என்று கூறிவிட, கடவுளரும் அதை ஆமோதித்திட, ஏமாற்றமடைந்த ப்ரோக், தலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த லாக்கின் கலகப் பேச்சு வெளியே கிளம்பாதிருந்தால் அதுவேபோதும் என்று கூறி, லாக்கின் வாயைத் தைத்து விட்டானாம்! இப்படிப் புராணம்!!

இவ்வளவு கெட்ட குணம் இருப்பினும், தார் தேவன் தன் ‘திருவிளையாடல்’களின் போது, இந்த லாக் தேவனைத் துணைக்கு அழைத்துச் செல்வாராம்!

அப்படிச் சென்றபோது, ஓர் முறை, ஒரு மாயாலோகம் தென்பட்டது; பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள்! அவைகளிலே பிரம்மாண்டமான ராட்சதர்கள்.

தார் தேவனும் லாக்கும் ஜோட்டூன்கள்மீது போரிடச் செல்லும் வழியிலே இந்த மாயாபுரியைக் கண்டனர்—மன்னன் முன் சென்று நின்றனர்—அவன் இவர்களை மதிக்கவேயில்லை!

“கடவுள்களா!” என்று கேவலமாகக் கேட்டுவிட்டு “எங்கே வந்தீர்கள்! என்ன செய்யவல்லீர்கள்?” என்று கேலி செய்தானாம், அந்த மாயாபுரி மன்னன். லாக், துள்-