உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மாஜி கடவுள்கள்


நம் நாட்டுப் புராணங்களுக்குத் தத்துவார்த்தம் கூறிப் பூரிப்பவர் சிலர் உண்டு—ட்யூடானியரிடமும் இருந்தது இந்தத் தந்திர முறை! எனினும் அறிவுத் தெளிவு ஏற்பட்டதும், இவைகளைத் கடவுட் கொள்கைக்கே இழுக்கு உண்டாக்குபவை என்று ஒதுக்கிவிட்டனர்—உண்மை அறிவை நாடினர், அந்நாட்டு மக்கள்.

மாயாபுரியில் இந்த அனுபவம் பெற்று, ஜோட்டூன் சென்று போரிலே வெற்றி பெற்றுத் திரும்பினர், தாரும் லாக்கும்—வழியிலே, தார் திகைத்தான், பதைத்தான், ஏனெனில் அவனுடைய அதி அற்புதமான ஆயுதமாகிய சம்மட்டி காணப்படவில்லை. தார் திகிலடைந்தான்—அந்தச் சம்மட்டி இல்லாமல் கடவுளர் உலகு பிழைத்திருக்க முடியாது. உடனே, லாக் ஒரு பறவை வடிவெடுத்து ஜோட்டூன் சென்று சம்மட்டியை, திரிபூம் என்ற மன்னன் களவாடி வைத்திருக்கும் செய்தியைக் கண்டறிந்தான். அந்த மன்னனோ, கட்டழகி பிரிஜியாவைக் கடிமணம் செய்து தந்தால் சம்மட்டியைத் திருப்பித் தருவதாகக் கூறினான். பூமிக்கடியில் ஒன்பது மைல் ஆழத்தில் சம்மட்டியைப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினான்.

லாக் கூறிய சேதிகேட்டு தார் திடுக்கிட்டான்—பிறகு, லாக்கின் யோசனைப்படி, தார், பிரிஜியா போல மாறுவேஷம் போட்டுக்கொண்டார், லாக், தோழியாக நடித்தான், இருவரும், ஜோட்டூன் சென்றனர்—திருமண விருந்து நடைபெற்றது—திருமணப் பரிசாகச் சம்மட்டி தரப்பட்டதும், பெண் வேஷத்தைக் கலைத்துவிட்டு, தார் தேவன், ராட்சசனைத் தவிடுபொடியாக்கினான். நம் நாட்டுப் புராணிகர்கள் மகாவிஷ்ணுவுக்கு, ‘மோகினி அவதாரக் கதை’ கட்டினார்களே, அதுபோல், ட்யூடன் புராணிகன், கட்டிவிட்டான், இப்படி ஒரு சரடு. சரடு என்று இன்று சர்வ