உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாக் தேவன்

179


சாதாரணமாகக் கூறுகிறோம்—ஆனால் அன்று, இதுபோலக் கூறினால் தலைபோகும்! அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையும், தணியாத வெறியும் இருந்தது பக்தர்களுக்கு.

லாக் தேவன், கொலையும் செய்திருக்கிறான்—அதுவும் ஒரு கடவுளை!!

ஓடினுக்கு, தார் தவிர வேறு குமாரர்களும் உண்டு, சிவனுக்கு விநாயகர் தவிர முருகனும் உண்டல்லவா, அதுபோல! முருகன் என்றால் அழகு என்றல்லவா பொருள்—மதவாதிகள், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியோரின் கற்பனைப்படி! அதுபோலவே, ஒரு ‘முருகன்’ ஓடினுக்கு. இந்த ட்யூடன் முருகன் பெயர், பால்டர். இவனைத்தான், சதிசெய்து கொன்றுவிட்டான், லாக்; கடவுளைக் கடவுள் கொல்கிறார்! பக்தர்கள், பதறாமல் படிக்கவேண்டும், பூஜையும் செய்யவேண்டும், என்று மதம் கட்டளை பிறப்பித்தது—கட்டுப்பட்டனர் மக்கள்! அக்ரமமே உருவான லாக் தேவன், தன் சொந்த அண்ணன் மகனாம் பால்டரைக் கொல்லத் துணிந்ததற்குக் காரணம் வேறொன்றுமில்லை, மற்றக் கடவுள்களெல்லாம், பால்டரிடம் பிரியமாக இருக்கிறார்கள் என்பதுதான்! எப்படி இருக்கிறது இந்தக் கடவுளின் குணாதிசயம்.

பால்டர் தேவனுக்கு ஒருநாள் ‘மரணபயம்’ ஏற்பட்டுவிட்டது—கலங்கினான்; கதறினான். அருமை மகனின் அச்சத்தைப் போக்க ஓடின் ஏதேதோ செய்தும் முடியலில்லை. தாயோ தவித்து, கடவுளர் உலகு முதற்கொண்டு சகல உலகங்களிலும் உள்ள சகல பொருள்கள், ஜீவராசிகளிடமும் முறையிட்டு, பால்டருக்கு ஒரு தீங்கும் செய்யக்கூடாதென்று, சகலத்திடமும் சத்தியம் பெற்றாள்—ஆனால், இதனால் என்ன ஆபத்து வந்துவிட முடி-