லாக் தேவன்
181
துடிப்பானாம், லாக்கின் துடிப்புத்தான், பூகம்பம்!! இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது ட்யூடானியருக்கு.
கலகமூட்டும் கடவுள்—காரிகை வடிவெடுக்கும் கடவுள்—புல்லுருவியால் சாகும் கடவுள்—பூனையைத் தூக்கமுடியாத கடவுள்—கொலை வேலை செய்யும் கடவுள்—கூந்தலைக் கத்தரிக்கும் கடவுள்—என்று இப்படிக் கதைகளைத் தீட்டி, அவைகளையே, ஆத்திகம் எனக்கொண்டு அல்லற்பட்டனர் ட்யூடன் மக்கள், அறிவுத்தெளிவு ஏற்படாமுன்பு. பிறகே கண்டனர் சித்தத்தில் எவ்வளவு பித்தம் இருந்தால், எத்தர்கள் கட்டிவிட்ட இந்தச் சொத்தைச் சேதிகளை கடவுளின் கதையாகக்கொண்டிருக்க முடிந்தது என்பதை—அருவருப்புப் பிறந்தது—கேள்வி பிறந்தது—கண்டனம் கிளம்பிற்று—மதவாதிகள் கொக்கரித்தனர்—முடிதரித்தோர் கொடுமை செய்து பார்த்தனர்—பகுத்தறிவு பணியவில்லை—தாக்கிற்று இத்தகு தகாத எண்ணங்களை—வெற்றியும் பெற்றது மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு—அந்த வெற்றியின் பயனாக, லாக் தேவன், ஓர் மாஜி கடவுளானான்!
❖